

நிதிச் சந்தை பற்றிய பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கான்டாங்கோ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அகாடமி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) நிர்வாக இயக்குநர் எஸ்.கே.மொகந்தி கலந்து கொண்டார். மேலும் ரிலையன்ஸ் கமாடிட்டி நிறுவனத்தின் கமாடிட்டி மற்றும் கரன்சி பிரிவின் தலைவர் மனோஜ் சுவர்ணா, பொருளாதார அறிஞரும் கமாடிட்டி துறை வல்லுநருமான சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு பங்குச்சந்தை பற்றிய பயிற்சிகளை கான்டாங்கோ பயிற்சி மையம் வழங்க இருக்கிறது. கமாடிட்டி சந்தை, டெரிவேட்டிவ் சந்தை, ஈக்விட்டி, கரன்சி சந்தை போன் றவை பற்றி இந்த மையம் பயிற்சிகளை வழங்க இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் நபர்களுக்கு பங்குச் சந்தை குறித்த பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
கோட்பாட்டு ரீதியாக பயிற்சி மட்டுமே அளிக்காமல் செயல் முறை விளக்கம் மூலம் பயிற் சிகளை வழங்க இருக்கிறோம். இதனால் முதலீட்டாளர்களுக்கு முழுமையான அனுபவம் கிடைக் கும் என்று கான்டாங்கோ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி டி. முருகப்பன் தெரிவித்தார்.
``இன்றைய நாளில் பங்குச் சந்தை பற்றிய அனைத்து தகவல் களும் கூகுளில் நிரம்பிக் கிடக்கின்றன. ஆனால் பயிற்சி மையத்தின் மூலமாக பயிலும் போது செயல்முறை விளக்கத் துடன் கற்கமுடியும். தற்போது பெரும்பாலானோர் கமாடிட்டி, டெரிவேட்டிவ் சந்தை பற்றி குறைந்த அனுபவத்துடன் சந்தைக்குள் வருகின்றனர். கமாடிட்டி பற்றிய அறிவும் அதனுடைய முக்கியத்துவம், தேவை பற்றியும் அறியாமல் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. நிதிச்சந்தை பற்றிய அறிவு இல்லாததே இதற்கு காரணம். இந்திய மக்கள் பெரும் பாலானோர் பழமைவாத சிந்தனை களோடு இருக்கின்றனர். இது போன்ற பயிற்சி மையங்கள் வரும்பொழுது பங்குச் சந்தை கள் பற்றிய அறிவு முதலீட்டாளர் களுக்கு கிடைக்கிறது. மக்க ளுக்கு நிதி சார்ந்த அறிவை புகட்டுவதற்கு செபி முயற்சி செய்து வருகிறது. சிபிஎஸ்இ பாடங்களில் நிதிச் சார்ந்த அறிவு குறித்த பாடங்களை வைப்பதற்கு செபி முயற்சி செய்து வருகிறது’’ என்று எஸ்.கே.மொகந்தி தெரிவித்தார்.