

ஜென்ரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜென்ரல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் பிஸினஸ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
ஏர்டெல் நிறுவனத்தின் சர்வதேச வாய்ஸ் பிஸினஸ் பிரிவுக்கு தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
மார்கன் ஸ்டான்லி, சிட்டி பேங்க் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும், கொல்கத்தா இந்திய மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.