

ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.2,000 கோடியை ஓலாவில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வாடகைக் கார் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஓலா, அமெரிக்காவின் உபெர் நிறுவனத் துக்கு போட்டியாக விளங்கும்.
இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தகவலறிந்தவர் கள் கூறியுள்ளனர். ஏஎன்ஐ டெக் னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஓலா, தற்போது 25 கோடி டாலர் முதல் 30 கோடி டாலர் வரை புதிய முதலீடுகளைத் திரட்டியுள்ளது. குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் கார்ப்பரேஷன் மற்றும் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள முதலீட்டு நிறுவனங்களிலிருந்து அடுத்த கட்ட முதலீட்டை திரட்டியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இதுகுறித்து ஓலா மற்றும் சாப்ட்பேங்க் நிறுவனங்கள் கருத்து கூற மறுத்துவிட்டன.
சமீபத்தில் சாப்ட்பேங்க் குழுமத் தின் சர்வதேச தலைவர் அலோக் சாமா பேசும்போது, இந்தியாவில் சந்தையை பலப்படுத்த கவனம் செலுத்தி வருவதாகவும், இதற் கேற்ப முதலீடுகளைத் தீவிரப் படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டி ருந்தார். இந்த நிறுவனம் இந்தியாவில் ஓலா, ஸ்நாப்டீல் ஆகிய இரண்டு நிறுவனத்திலும் பெரிய அள வில் முதலீடுகளை செய்துள்ளது.
வாடகைக் கார் துறையில், பிரீமியம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சொகுசு கார் சேவைகளை அளிக்கவும் ஓலா திட்டமிட்டுள்ளது.