நிதி முறைகேடுகளை விசாரிக்க காவல் துறைக்கு பயிற்சி அளிக்க செபி திட்டம்

நிதி முறைகேடுகளை விசாரிக்க காவல் துறைக்கு பயிற்சி அளிக்க செபி திட்டம்
Updated on
1 min read

நிதி முறைகேடுகளை விசாரிக்க வும் மற்ற புலனாய்வு அமைப்பு களுடன் இணைந்து பணியாற்றுவ தற்காகவும், நிதி சார்ந்த விஷயங் களை புரிந்து கொள்வதற்காகவும் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க செபி திட்டமிட்டு வரு கிறது.

நிதிச்சந்தையில் நடக்கும் முறை கேடுகள், பொன்சி திட்டங்கள், தவிர சந்தையில் நடக்கும் பல மோசடிகள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் புரிந்துகொள்ள வும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உதவும் வகை யில் பயிற்சி அளிக் திட்டமிடப் பட்டிருக்கிறது. காவல் துறையின ருக்கு மட்டுமல்லாமல் செபி பணியாளர்களுக்கு தொழில் நுட்பம் உள்ளிட்ட சில பயிற்சி அளிக்கவும் செபி முடிவு செய் திருக்கிறது. பேரியல் பொரு ளாதாரம், அந்நிய செலாவணி மோசடி, ஊக பேர வணிகம், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள் ளிட்ட பயிற்சிகளை நடப்பு நிதி ஆண்டுக்குள் செயல்படுத்த செபி முடிவெடுத்திருக்கிறது. இதுபோன்ற பயிற்சிகள் என்ஐ எஸ்எம் உதவியுடன் வழங்கப்பட உள்ளன.

தவிர நடப்பு நிதி ஆண்டில் குரூப் டி மற்றும் அதற்கும் மேல் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு தலைமைப்பண்பு, குழுவாக பணிபுரிதல் மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கவும் செபி திட்ட மிட்டுள்ளது.

நிதிமோசடி தொடர்பான புகாரை காவல் துறையிடம் விளக்கு வது கடினமாக இருக்கிறது என்பது போன்ற புகார்கள் பொது மக்களிடம் இருந்து அதிகமாக வந்திருப்பதால் காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்திருக்கிறோம் என்று செபி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேபோல புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதுபோன்ற வழக்குகளை புரிந்து கொள்வதிலும் விசாரிப்பதிலும் இருக்கும் கடினமான சூழலால் தேவையற்ற காலதாமதம் ஏற்படு கிறது. மாறாக சரியான சந்தை நடவடிக்கைகள் கூட தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றன. நிதிச்சந்தை குறித்து சரியான புரிதல் இல்லாததே இதற்கு காரணமாகும். முதலீட்டாளர்கள் நலன் மற்றும் குற்றங்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க இதுபோன்ற நிதி சார்ந்த பயிற்சி அவசியம் என்று செபியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in