Published : 11 Jun 2022 03:37 PM
Last Updated : 11 Jun 2022 03:37 PM

எப்போதெல்லாம் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும்? - ஒரு விரைவுப் பார்வை

வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தாலே எல்லோருக்குள்ளும் ஒரு பதற்றம் உருவாகி விடும். அப்படியெல்லாம் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ்களை நாம் வருமான வரித் துறை அனுப்பும் கடிதங்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

வருமான வரித் துறை சில நேரங்களில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும், இது வாடிக்கையான நிகழ்வு தான். வெறும் கடிதம் என்றால் மக்கள் அதை எளிதாக கடந்து சென்று விடுவார்கள் என்பதற்காக விளக்கக் கடிதங்களுக்கு ஒரு அதிகாரபூர்வ அந்தஸ்து கொடுக்க அவற்றை "நோட்டீஸ்" என்று அழைக்கின்றனர்.

சில நோட்டீஸ்கள்: வருமான வரித் துறையில் இருந்து முக்கியமாக இரண்டு மூன்று நோட்டீஸ்கள் வரும். வருமான வரிச் சட்டத்தின் உட்பிரிவுகளின் படி அனுப்பப்படும் இந்த நோட்டீஸ்கள். அந்த உட்பிரிவுகளின் பெயரிலேயே பொதுவழக்கில் அறியப்படுகின்றன. அதன்படி பிரிவு 143(2)-ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரும், பிரிவு 142 (1) -ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரலாம். பிரிவு 156-ன் கீழ் இன்டிமேஷன் அல்லது டிமாண்ட் நோட்டீஸும் வரலாம்.

ஸ்க்ரூடினைசிங் (scrutinizing): வரி செலுத்துபவர் வருமான வரித் தாக்கல் செய்து விட்டார். அவரது வரித் தாக்கல் மதிப்பீடு செய்யப்பட்டு அவர் அதிகமாக வரி செலுத்த வேண்டியது இருந்தால் டிமாண்ட் வந்திருக்கும். ஒரு வேளை அதிகமாக வரி செலுத்தியிருந்தால் அவருக்கு ரீ ஃபண்ட் வந்திருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து கணினி தோராயமாக, பரவலாக சில வரித் தாக்கல் கணக்குகளை தேர்வு செய்து ஆய்வு பண்ணும். அதற்கு "ஸ்க்ரூடினைசிங்" என்று பெயர்.

தாக்கல் செய்யப்பட்ட ஒரு கணக்கை மேலும் ஆய்வு செய்வதே "ஸ்க்ரூடினைசிங்". அதாவது தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, வருமானம் சரியானபடி தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்யும். இதற்காக பரவலாக சில வரித் தாக்கல்கள் எடுக்கப்படும்.

நோட்டீஸ் 143(2): அப்படி ஒரு வரித் தாக்கல் கணக்கு ஸ்க்ரூடினைசிங்-க்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அந்த தாக்கலுக்குத் தொடர்புடைய வரி செலுத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 143 (2) கீழ் இதனை, 143 (2) நோட்டீஸ் என்பர். அதில், இந்தாண்டு நீங்கள் தாக்கல் செய்திருக்கும் வருமான வரித் தாக்கல் ஸ்க்ரூடினைசிங் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எங்களுக்கு இந்த இந்த தகவல்கள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருக்கும்.

நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நாம் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். முன்பு தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் இப்போது அவை கிடையாது என்பதால் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை அனுப்பி வைத்தால் போதும்.

குற்றத்தின் அடையாளமா நோட்டீஸ்?: வரிமான வரித் துறை கேட்டிருக்கும் கேள்விகளுக்கு வரி செலுத்துபவர் அனுப்பியிருக்கும் தகவல்களே போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருந்தால் வருமான வரித் துறையினர் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். கூடுதலாக ஏதாவது கேள்விகள் இருந்தால், அதனைத் திரும்பவும் அனுப்புவார்கள். இந்த ஆய்வு இயல்பான ஒன்றே. வரி செலுத்துபவர் மீது சந்தேகம் வந்து, அவரது வரி தாக்கல் கணக்கை மட்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வரித் தாக்கல்களில் இருந்து கணினி தோராயமாக சில கணக்குகளை எடுத்துக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு வரி செலுத்து அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட சொத்தை விற்பனை செய்திருக்கிறார், அதன்மூலம் அவருக்கு ரூ.5 கோடி வருமானம் வந்துள்ளது. இந்த சொத்து விற்பனை குறித்து ஆய்வு செய்யுங்கள் என்று கணினி எடுத்துக்கொடுக்கும். இப்படி ஏதாவது குறிப்பிட்ட நிகழ்வுகள் இருக்கும். அதேபோல அந்த குறிப்பிட்ட நடவடிக்கை குறித்து மட்டும் தான் கேள்விகளும் கேட்கப்படும்.

இந்த ஆண்டு நீங்கள் இந்த சொத்தை விற்பனை செய்தீர்களா? அதைப்பற்றி தகவல்கள் கொடுங்கள் என்று கேட்பார்கள் நாம் விளக்கம் தரப்போகிறோம். சொத்து விற்பனை செய்தது தொடர்பான விற்பனை பத்திரம் நம்மிடம் இருக்கும். அதன் ஜெராக்ஸ் காப்பி கொடுத்தால் போதும். அதே போல அதற்காக பெறப்பட்ட பண விபரம்.

தற்போதைய சூழலில் அனைத்து பண பரிமாற்றங்களும் வங்கி மூலமாகவே நடப்பதால், வங்கியில் எந்தெந்தெந்த தேதியில் தொகைகள் பெறப்பட்டன போன்ற விபரங்களையும், சொத்து விற்பனையை பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ததற்கான ஆவணங்களை காட்டி, இந்த தகவல்கள் வரி தாக்கல் படிவத்தில் காட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தால் போதுமானது. வேலை சுலபம்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x