

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர்கல்வி பெற மாணவர்கள் விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறும் கல்வி மட்டுமின்றி எதிர்கால வேலைவாய்ப்பையும் கவனித்தில் கொண்டு பலரும் வெளிநாடுகளில் கற்க விரும்புகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பு பயிலச் செல்லும் போது அந்த நாடுகளிலேயே வேலைவாய்ப்பு பெற்று நிரந்தரமாக குடியுரிமை கிடைத்திட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி எந்த நாட்டில் சென்று கற்கிறோமோ அந்த நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற எளிமையாக வாய்ப்பு கிடைக்கும். இதனை கருத்தில் கொண்ட பலரும் முதுகலை கல்வி பயிலும்போதே வெளிநாடுகளுக்கு சென்று விடுவது என்பதை இலக்காக கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் பெருமளவு மாணவர்கள் பிரிட்டன் சென்று கற்கின்றனர். பிரிட்டனைப் போலவே அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
பிரிட்டன், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் இந்திய மாணவர்கள் கல்வி பெறுவதற்காகச் செல்கின்றனர். வெளிநாடுகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகள் என பல்வேறு நிலைகளிலும் கல்வி பெற முடியும்.
சுமையாகும் கல்வி செலவு
ஆனால் கல்விக்கான செலவு இந்தியாவிலேயே பெரும் தொகையாக உருவெடுத்துள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு கூட கல்வி செலவு என்பது மலைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. அதிலும் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்க வேண்டும் என்பது பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
இந்தியாவை ஒப்பிடுகையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் உயர்கல்விக்கான வருடாந்திர கட்டணம் என்பது வெளிநாடுகளில் கல்வி கற்க 5 முதல் பத்து மடங்கு அதிகமாக செலவாகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மற்றும் கனடா நாடுகளுடன் ஒப்பிடும் போது செலவு இன்னமும் அதிகமே.
வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு பல்வேறு வகையான உதவித் தொகைகளும், கல்விக் கடன்களும் கிடைக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கல்விக்காக கடன் தருவதற்கு வங்கிகள் இருக்கின்றன. அதனால் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட வெளிநாட்டுக் கல்வி கற்க முடியும்.
வெளிநாடு சென்று படிக்கும் 70 சதவீத மாணவர்கள் வங்கிக் கடன் பெற்று கல்வி கற்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி பிஎச்டி போன்ற ஆய்வு படிப்புகளை தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
வெளிநாடுகளில் கல்வி பெற கல்விக் கடன் ஒருபுறம் என்றால் கடன் வாங்கும்போது அதனை திருப்பிச் செலுத்த போதுமான நிதி சூழல் இல்லாத நிலையில் பலரும் இந்த வாய்ப்பை தவற விட்டு விடுகின்றனர். குறிப்பாக பட்டபடிப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று திறனுடன் இருப்பவர்கள் பலர் வெளிநாடுகளில் முதுநிலை பட்டபடிப்பு பயில விரும்புகின்றனர்.
ஆனால் அவர்கள் குடும்பத்தில் கல்வி கடன் பெறும் சூழல் இல்லாத நிலையில் அவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகள் கைகொடுக்கின்றன. மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு வகைகளில் பெறலாம். அதாவது ஒரளவு கடன் பெறுபவர்கள் கூட அவர்களுக்கு கல்வி உதவித் தொகை விளங்குகிறது.
இதுபோன்ற இளைஞர்களுக்கு குடும்ப சூழலை மாற்றவும் கல்வி மூலம் ஏற்றம் பெறவும் முதுநிலை படிப்பபை தொடர கல்வி உதவித் தொகைகள் பெரும் உதவி புரிகின்றன. ஆனால் இந்த மாணவர்கள் இதுகுறித்த போதுமான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வாய்ப்புகள்
உதவித் தொகை என்பது மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் கூட்டமைப்பு, உலகவங்கி என பல அமைப்புகள் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன.
படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன.
இதில் இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒருவர் குறிப்பிட்ட நிறுவனத்திடம் கல்வி உதவித் தொகையை பெற்று மேற்படிப்பை முடித்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நல்ல பணிகளில் சேர முடியும். சில நிறுவனங்கள் மாணவர்களின் உதவிக்காக தனியாக கல்வி உதவித் தொகையை வழங்குகின்றன.
இந்திய மாணவர்களுக்கு சர்வதேச கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது. வெளிநாட்டில் படிப்பதற்கான ஒட்டுமொத்த செலவை தரும் வகையில் மிகப்பெரிய நிவாரணமாக இந்த கல்வி உதவித் தொகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்திய மாணவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் வெளிநாட்டில் படிக்க வெளிநாட்டு உதவித்தொகைகளை வழங்குகின்றன. முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு பெரும்பாலான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. எனினும் இந்திய மாணவர்களுக்கான பல இளங்கலை உதவித்தொகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களை கற்க செய்வது மட்டுமல்லாமல் அவர்களது திறனை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள நாடுகள் புரிந்து கொண்டு அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்கின்றன. பல்கலைக்கழகங்கள், அரசுகள், தனியார் நிறுவனங்கள் சர்வதேச மாணவர் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன.
நிறுவனங்கள்
நேஷனல் ஓவர்சிஸ் ஸ்காலர்ஷிப் (National Overseas Scholarship), நேரு முதுநிலை ஸ்காலர்ஷிப் (Fulbright-Nehru Master’s Fellowships), காமன்வெல்த் காலர்ஷிப்(Commonwealth Scholarships), கலாம் கிளைமேட் பெலோஷிப் (Fulbright-Nehru Doctoral Research Fellowship) உள்ளிட்டவை சில முக்கியமான கல்வி உதவித் தொகைகளாகும். இதனை தெரிந்து கொள்ள அந்தந்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று பார்த்தால் தகவல்கள் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி சில குறிப்பிட்ட நிறுவனங்கள் பெரிய அளவில் கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றன. இவையும் மாணவர்களின் கல்விக் கனவை நினைவாக்குகின்றன.
நோவஸ் பயோலஜிக்கல் பயோடெக்னாலஜி சார்ந்த நிறுவனமாகும். இது கொலராடோவின் லிட்டில்டனில் அமைந்துள்ளது. இது கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஓக்வில்லில் நிறுவப்பட்ட விநியோக அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆராய்ச்சி சார்ந்த மற்றும் அவர்களின் அறிவியல் கண்ணோட்டத்தை மேலும் மேம்படுத்த விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை கூட கல்வி உதவித் தொகையாக வழங்குகிறது.
இந்த நிறுவனத்தின் உதவித்தொகையிலிருந்து பயனடைவதற்கான தகுதி அளவுகோல் அவர்கள் அறிவியல் அல்லது அறிவியல் தொடர்பான ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை 1500 டாலர்கள் வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி மற்றம் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் தேடி பெறலாம்.
பெல் இந்தியா (BEL India) நிறுவனம் கயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் உதவித்தொகையை ஏற்பாடு செய்கிறது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் என்பது ஆஸ்திரேலியாவின் தலைநகரான பிரிஸ்பேனில் உள்ள ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகமாகும். இது பெரிய அளவில் பிரபலமான பல்கலைக்கழகமாகும். சர்வதேச பள்ளி தரவரிசையில் உள்ள முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று கற்க விரும்பும் மாணவர்களுக்கு டாடா உதவித்தொகை பெரிய அளவில் கைகொடுக்கிறது. இந்தியாவின் டாடா குழுமத்தின் சேவை நோக்குடன் செயல்படும் துணை நிறுவனமான டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளையின் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இளங்கலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க அனுமதிக்கும் 25 மில்லியன் டாலர்கள் உதவித்தொகை வழங்க இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி டாடா பில்டிங் இந்தியா என்பது கல்வி முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளைக் கொண்ட மற்றொரு நிறுவனமாகும். இது இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா குழும நிறுவனமாகும். இதுபோட்டியின் அடிப்படையில் உதவித் தொகை வழங்குகிறது.
இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் வணிகம், பொருளாதாரம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் படிக்கும் இந்திய மாணவர்களை பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர சமகால உதவித்தொகை வழங்குகிறது.
ஆயில் இந்தியா லிமிடெட் நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரோகார்பன் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் அரசுக்கு சொந்தமான நிறுவனமாகும், மேலும் நொய்டாவில் கார்ப்பரேட் அலுவலகத்தை கொண்டுள்ளது.
ஆயில் இந்தியா உதவித்தொகை வழங்குகிறது. அத்தகைய ஒரு உதவித்தொகை மெரிட் ஸ்காலர்ஷிப் ஆகும். இந்த உதவித்தொகையைப் பெற மாணவர்கள் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க வேண்டும். சில இளங்கலை படிப்புகளுக்கும் பெறலாம்.
வெளிநாடுகளுக்கு சென்று கற்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறவும் உதவித் தொகைகள் உள்ளன. இவற்றில் பெருமளவு நிறுவனங்களாலும் வழங்கப்படுகின்றன.