இந்தியாவின் ஜிடிபி 7.5% ஆக குறையும்: உலக வங்கி கணிப்பு

இந்தியாவின் ஜிடிபி 7.5% ஆக குறையும்: உலக வங்கி கணிப்பு
Updated on
1 min read

புது டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.5 சதவீதமாக குறையும் என கணித்துள்ளது உலக வங்கி. கடந்த ஏப்ரலில் 8.7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக சரிவு கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம், விநியோக பாதிப்பு, உலக அளவில் நிலவி வரும் அரசியல் சூழல் போன்றவை இதற்கு காரணம் என தெரிகிறது. இரண்டாவது முறையாக நடப்பு நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை கணித்துள்ளது உலக வங்கி. அடுத்த நிதி ஆண்டில் (2023-24) ஜிடிபி வளர்ச்சி 7.1 சதவீதமாக குறையும் என கணித்துள்ளது. அதற்கடுத்த 2024-25 நிதியாண்டில் வளர்ச்சி 6.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் மொத்தம் விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாகவும், சில்லறை பிரிவில் 7.79 சதவீதமாகவும் உயர்ந்தது. தனியார் மற்றும் அரசின் நிரந்தர முதலீடு வளர்ச்சிக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளது மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் மீண்டும் பொருளாதார அபாயத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி சதவீதம் சரிவு காணும் என கணித்துள்ளது உலக வங்கி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in