Published : 07 Jun 2022 08:36 PM
Last Updated : 07 Jun 2022 08:36 PM

வருமான வரித் தாக்கலில் தவறுதலாக அதிக வருமானம் காட்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

“வருமான வரியைப் பொறுத்தவரையில் முதல் அடி அல்லது தொடக்க நிகழ்வு என்பது வரி தாக்கல் செய்வது. வரி தாக்கல் செய்தவதற்கு நிரந்தரக் கணக்கு எண் எனப்படும் "பான் எண்" அவசியம். அப்படியென்றால் பான் எண் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டுமா என்ற கேள்வி நமக்குள் எழும். வரி செலுத்தும் அளவிற்கு உங்களுக்கு ஆண்டு வருமானம் இருந்தால் அல்லது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் வருமானக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறை அலுவலகத்திற்குச் சென்று, உரிய படிவங்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து பின்னர் வரி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது இணையம் மூலம் வரி தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் தாக்கல்: கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் அனைத்து துறைகளையும் போல வருமான வரித் துறையும் ஆன்லைன் வசதியை நடைமுறைப்படுத்துகிறது. www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்றால், உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் என்று கேட்டு, அதற்கான வழிகாட்டுதலைச் செய்கிறது. இதில் தற்போது உள்ள கூடுதல் சிறப்பம்சம், உங்களுடைய வருமானம் இவ்வளவு என்று சொன்னால், அதற்குரிய வரி எவ்வளவு என்ற தகவலை அந்தத் தளமே உங்களுக்கு தந்து விடும்.

உங்களுடைய வருமானத்துடன், என்ன என்ன கழிவுகள் உண்டு, என்ன வகையான சேமிப்புகள் இருக்கிறது என்ற தகவல்களைத் தந்தால் மட்டும் போதும், நாம் கட்டவேண்டிய வரித் தொகையை கணினியே கூட்டிக் கழித்து தெரிவித்துவிடும். உடனடியாக நமக்கான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தி விட்டு, அதனையும் நாம் வரித் தாக்கல் தகவலுடன் இணைத்து தாக்கல் செய்தாலே போதும், வேலை சுலபமாக முடிந்துவிடும்.

இணையச் சிக்கல்: சரி, இவ்வாறு ஆன்லைன் மூலம் வரி தாக்கல் செய்யும்போது பிரச்சினைகள் வருமா, வந்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? முதலில் கனெக்டிவிட்டி எனப்படும் இணைப்பு பிரச்சினைதான் வரும். இது இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை என்றாலும், இதற்கும் வருமான வரித் துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்றாலும் அந்தச் சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ரிவைஸ்டு ரிட்டர்ன்: இரண்டாவதாக ஒருவர் வருமான வரி தாக்கல் செய்துவிட்டார். அதில் ஏதாவது தவறு இருந்தால் என்னவாகும்? பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக ரிவைஸ்டு ரிட்டர்ன் எனப்படும திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்ய முடியும். தவறாக பதிவு செய்த விஷயங்களை நாம் சரிசெய்து மீண்டும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். இதற்கு ரிவைஸ்டு ரிட்டர்ன் அல்லது திருத்தப்பட்ட படிவம் என அழைக்கப்படுகிறது.

மேல்முறையீடு சாத்தியம்: ஒருவேளை திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்யவில்லை. வருமானத்தையே தவறுதலாக எழுதிவிட்டால் என்ன செய்வது. அதாவது, வருமானம் ரூ.1,10,000 ( ஒரு லட்சத்து 10 ஆயிரம்) என்பதற்கு பதிலாக ரூ.11,00,000 (பதினொரு லட்சம்) என எழுதிவிட்டார் என்றால் 11 லட்சத்திற்கு வரி விதிக்கப்படும்போது வரித் தொகை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளிலும் கூட ஒருவர் மேல்முறையீடு போக முடியும்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x