

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தமிழ்நாடு பிராப்பர்டி எக்ஸ்போ - 2022’, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
கண்காட்சியை, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்ட தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா, திரைப்பட நடிகை ஷீலா ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதில், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர்கள் நீரஜ் பாண்டே, அமித் வர்மா, வினோத் ஜெய்ஸ்வால், துணைப் பொது மேலாளர் ரவிக்குமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலைப் பொது மேலாளர் (விளம்பரப் பிரிவு) எஸ்.வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சி குறித்து, எஸ்பிஐ தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா கூறியதாவது: எஸ்பிஐ நடத்தும் இந்தக் கண்காட்சியில் 44 கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. கரோனா பெருந்தொற்று சமயத்தில் பலர் வீடுகளில் இருந்து பணிபுரிந்தனர். தற்போதும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், பெரிய வீடு தேவைப்படுகிறது. அதற்கேற்ற வகையில் பலர் தற்போது பெரிய வீடுகளை வாங்க ஆர்வம் செலுத்துகின்றனர்.
அத்துடன், பலர் வீட்டிலிருந்தே பணிபுரிந்ததால் செலவை மிச்சப்படுத்தி சேமிப்பை அதிகரித்தனர். அவர்களும் தற்போது புதிய வீடுகளை வாங்குகின்றனர். குறைந்தபட்சமாக 7.05 சதவீதம் முதல் அதிகபட்சமாக 7.55 சதவீதம் மட்டுமே வீட்டுக் கடனுக்கு வட்டி வசூலிக்கிறோம். மேலும், சிறப்புச் சலுகைகளை இக்கண்காட்சியில் வழங்குகிறோம்.
அடுத்தக் கட்டமாக 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் வீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம். இதற்காக 47 நகரங்களில் ரீடெய்ல் அசெட் மையங்களை ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு ராதாகிருஷ்ணா கூறினார்.
விழாவில் பங்கேற்று பேசிய திரைப்பட நடிகை ஷீலா ராஜ்குமார், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் உணவு, உடை, வசிக்க வீடு ஆகிய 3 விஷயங்கள் இன்றியமையாதவை. இதில் சொந்த வீடு என்பது லட்சியம். இந்தக் கண்காட்சியை வந்து பார்த்தால், அந்த லட்சியத்தை எளிதாக அடையலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில், எஸ்பிஐயில் கடன் பெற்ற சி.எஸ்.சீனிவாசன், எஸ்.மகாலஷ்மி தம்பதியினர் கூறும்போது, “நாங்கள் கோயம்பேட்டில் வீடு கட்டுவதற்காக எஸ்பிஐ வங்கியில் இருந்து ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளோம். விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் எங்களுக்கு கடன் கிடைத்தது” என்றனர்.
இதேபோல் கே.ஷேக் அகமது அலி, ஹுசைன் பீவி தம்பதியினர் கூறும்போது, “அனகாபுத்தூரில் வீடு கட்டுவதற்காக எஸ்பிஐயில் ரூ.60 லட்சம் கடன் பெற்றுள்ளோம். விண்ணப்பித்த 4 வாரங்களில் எங்களுக்கு கடன் கிடைத்தது. அதுவும் 6.80 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் கடன் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.
3 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டி ஹோம்ஸ், ஹாலிடே ஹோம்ஸ் ஆகியவற்றை சிறப்பு தள்ளுபடியுடன் வாங்கலாம்.
அத்துடன், சிறப்பு கடன் வசதி, பிராப்பர்டி இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இதன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமாக ஐ ஆட்ஸ்