Published : 03 Jun 2022 12:40 AM
Last Updated : 03 Jun 2022 12:40 AM
புதிய நடைமுறை: கடந்த ஆண்டிலிருந்து வருமான வரித் துறை மதிப்பீட்டில் ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டடுள்ளது. இனிமேல் அதுதான் நடைமுறையில் இருக்கப் போவதாகத் தெரிகிறது. அதனால் அதை புதிய முறை என்று சொல்ல முடியாது. அதாவது, வருமான வரி மதிப்பீட்டின் அந்தப் புதிய முறையை Faceless Assessment என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழில் முகமில்லா மதிப்பீடு என்று நாம் சொல்லலாம். அது என்ன முகமில்லா மதிப்பீடு என்ற சந்தேகம் இப்போது நமக்கு வரலாம். அதற்கு இதுவரை வருமான வரியை மதிப்பீடு செய்வதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முன்பு ஒருவர் வருமான வரித் தாக்கல் செய்த பின்னர், அந்த தகவல்களை எந்த வருமான வரித் துறை அதிகாரி மதிப்பீடு செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
அதிகாரியை அறியலாம்: அதாவது ஒருவருடைய 'பான் எண்' மூலமாக எந்த அதிகாரி அந்த வருமான வரித் தாக்கலை மதிப்பீடு செய்கிறார் என்று அறிந்து கொள்முடியும். உதாரணமாக வருமான வரி தாக்கல் செய்தவர் சென்னை சரகத்தில் சம்பளம் பெறுவராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வருமான வரித் தாக்கல் செய்த பின்னர், அவரது ' பான் எண்' மூலமாக அந்த வருமான வரி தாக்கல் விபரங்கள் சென்னையில் உள்ள எந்த வருமான வரித் துறை அலுவலர் மதிப்பீடு செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஒருவேளை அவருக்கு வருமான வரி தொடர்பாக ஏதாவது குறைகள் இருக்கிறது, அவருக்கு வரவேணடிய ரீ ஃபண்ட் திருப்பி வரவேயில்லை. அவருடைய மதிப்பீடு நிறைவடையவில்லை போன்ற குறைகளை, அந்த அதிகாரியிடம் நேரிடியாகச் சென்று எழுதிக் கொடுத்து விளக்கம் பெற முடியும். இதுதான் பழைய நடைமுறை.
யாரும் மதிப்பீடு செய்யலாம்: கடந்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறை மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது முகமில்லா மதிப்பீடு என்று மாற்றியிருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்னவென்றால், ஒருவர் வருமான விபரங்களைத் தாக்கல் செய்த பின்னர், அது யாரிடம் இருக்கும், அதனை யார் மதிப்பீடு செய்வார்கள் என்று விபரங்களை இனி அறிந்து கொள்ள முடியாது. அதனை யாரும், எங்கிருந்தும் மதிப்பீடு செய்யலாம். ஒருவர் தாக்கல் செய்த தகவல்களை கணினி எந்த அதிகாரியிடமும் மதிப்பீட்டிற்கு அனுப்பலாம்.
அதே பழைய உதாரணத்தின்படி சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் உள்ள ஒருவர், சென்னையில் வருமான வரி தாக்கல் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதனை மும்பை, சண்டிகர், பஞ்சாப் என இந்தியாவின் எந்த இடத்தில் உள்ள வருமான வரித் துறை அதிகாரியும் மதிப்பீடு செய்யலாம். தாக்கல் யாரிடம் போகிறது, யார் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என தெரிய வாய்ப்பில்லை. மதிப்பீடு செய்யும் அதிகாரியும், எவ்வளவு வருமானம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு எவ்வளவு வருமான வரி கட்டப்பட்டிருக்கிறது, கூடுதலாக ஏதாவது வரி கட்ட வேண்டியது இருக்கிறதா என்று பார்ப்பார்.
அதில் ஏதாவது தகவல் கேட்க வேண்டியதிருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக கேட்பார். சம்மந்தப்பட்டவர் அதற்கு ஆன்லைன் மூலம் பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த அதிகாரி தனது மதிப்பீட்டை நிறைவு செய்வார். அதாவது வரி செலுத்துபவர் யார், அதனை மதிப்பீடு செய்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. இதனையே முகமில்லா மதிப்பீட்டு முறை என்று பெயர்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT