

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத் தில் மியூச்சுவல் பண்டில் புதிதாக 1.6 லட்சம் முதலீட்டாளர்கள் முத லீடு செய்திருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே சிறு முத லீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக சிறு நகரங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
`செபி’ தகவல்கள் படி கடந்த ஏப்ரல் இறுதியில் 3,61,83,250 கணக்குகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் (2015-16) 43 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இருந் தனர். அதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2014-15) 25 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4,438 கோடி ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கின் றன. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு இந்த தொகை அதிகமாகும். ஏப்ரலில் சென்செக்ஸ் 1.04% உயர்ந்தது.
கடந்த ஏப்ரலில் 1.7 லட்சம் கோடி ரூபாய் மியூச்சுவல் பண்ட்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.1.1 லட்சம் கோடி மட்டுமே முதலீடு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.