

தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தரம், சான்று, விற்பனை மதிப்பு என தங்கத்திற்கும் மற்ற பல பொருட்களை போலவே உலகளாவிய குறியீடுகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இந்த காலத்தில் தங்கம் வாங்கும் ஒவ்வொருவரும் இதனை கண்டிப்பாக அறிந்திருப்பது அவசியம்.
தங்கம் என்பது 24, 22, 18, 14 கேரட்களாக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையானதாகும். இதனை நாணயம், பிஸ்கட் என அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. அதனுடன் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்தே ஆபரணம் செய்ய முடியும்.
எவ்வளவு கேரட் என்பதை பொருத்து அதில் கலந்துள்ள பிற உலோகங்களின் அளவு இருக்கும். 22 கேரட் தங்க ஆபரணத்தில் தங்கம் கூடுதலாகவும், செம்பு குறைவாகவும் இருக்கும். அதேசமயம் 14 கேரட் ஆபரணங்களில் 22 கேரட்டை விடவும் தங்கம் குறைவாக பயன்படுத்தப்படும். எனவே அதற்கு ஏற்ப அதன் விலைகளில் மாற்றம் இருக்கும்.
எனவே நகை வாங்குபவர்கள் தங்கத்தின் தூய்மைக்கான அளவீடான கேரட் மதிப்பையும், அதற்குரிய விலையையும் சரியாக கொடுக்கிறோமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனை சரி பார்க்காமல் தங்க நகைகளை நீங்கள் வாங்கக்கூடாது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்தாலும் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களாக ஹால்மார்க் கட்டாயம் என்ற வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.
நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் பழைய நகையை மெருகேற்றி விற்கும்போது, அதனை தவறுதலாக புதிய நகை என எண்ணி வாங்குவதை தவிர்க்க முடியும்.
நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.
ரசீது இல்லாமல் நகை வாங்கினால் பிரச்சினை ஏற்படும்போது புகார் அளிப்பது கடினமாகி விடும். இதுமட்டுமின்றி வரும்காலங்களில் நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ரசீதுடன் தங்கம் வாங்குவது அவசியமாகும்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்