

புதுடெல்லி: 2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யதா நபர்களுக்கு அதிகமான டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்ய வகை செய்யும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.
2020-21 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாத நபர்களில் நீங்களும் இருந்தால் நீங்கள் வரி தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலில் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் (TDS) எனப்படும் மூலத்தில் இருந்து பிடிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கும்.
2020-21 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2021-22) ஐடிஆர் தாக்கல் செய்வதைத் தவறவிட்டால், நடப்பு 2022-23 நிதியாண்டில் நீங்கள் சம்பாதிக்கும் சில வருமானங்களுக்கு அதிக டிடிஎஸ் பொருந்தும்.
குறிப்பிட்ட நபர்களுக்கு அதிக டிடிஎஸ் (TDS) விதிக்கும் பிரிவுகள் 206AB மற்றும் 206CCA ஆகியவற்றின் கீழ் உள்ள விதிகளை மத்திய பட்ஜெட் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன.
பிரிவு 206 ஏபி, 206 சிசிஏ என்றால் என்ன?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது வருமான வரி சட்டத்தில் 206 ஏபி (206AB) மற்றும் 206 சிசிஏ (206CCA) ஆகிய 2 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இதன் படி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியில் கழிக்கப்படும் வருமான வரி பிடித்தம் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் கண்டிப்பாக வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்டணம் இரு மடங்காகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு 206 ஏபி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு பணம் செலுத்தும் போது அல்லது வசூல் செய்யும் போது சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமான டிடிஎஸ் (TDS) தொகையை பிடிக்க வழி வகை செய்கிறது.
அதேபோல், 206 சிசிஏ பிரிவு, குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக தொகை பெறுபவர்களிடமும் டிடிஎஸ் வரி வசூல் கூடுதலாக செய்ய வழி வகை செய்கிறது. செய்கிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக டிடிஎஸ் (TDS) கீழ் வருபவர்களை கண்டறிய வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 206AB மற்றும் 206CCA இன் கீழ் செயல்பாட்டைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையில் உள்ளது என்ன?
1) வரி கழிக்கப்பட வேண்டிய/ சேகரிக்கப்பட வேண்டிய ஆண்டிற்கு முந்தைய இரண்டு வருடங்களுக்கான, இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள்.
பிரிவு 139 இன் துணைப்பிரிவு (I) இன் கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் தேதி காலாவதியாகிவிட்டதாகக் கணக்கிடப்படுவதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் தேவையாகும்.
ட்டிஎஸ் கழிக்கப்பட்ட வரி மற்றும் மூலத்தில் வசூலிக்கப்படும் வரியின் மொத்தத் தொகை இந்த முந்தைய இரண்டு வருடங்களில் ஒவ்வொன்றிலும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக இருப்பவர்கள்.
நடப்பு நிதியாண்டில் (2022-23) அதிக ட்டிஎஸ் பொருந்துமா இல்லையா என்பதைக் கண்டறிய, அந்த நபர் ஐடிஆர் தாக்கல் செய்தாரா அல்லது தொடர்புடைய முந்தைய நிதியாண்டில் அதாவது 2020-21 நிதியாண்டில் தாக்கல் செய்தாரா என்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, முந்தைய நிதியாண்டில் (2020-21) மொத்த ட்டிஎஸ் தொகை ரூ. 50,000க்கு அதிகமாக உள்ளதா என்பதை வங்கிகள் சரிபார்க்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் அதிக டிடிஎஸ் பொருந்தும்.