ஏழைகளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் பேச்சு

ஏழைகளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் பேச்சு
Updated on
2 min read

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டி ருக்கும் ஏழைகளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலீட்டை ஊக்குவிக்க வட்டி விகிதத்தை குறைப்பது மட்டுமே தீர்வல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கூறியிருக்கிறார்.

வங்கித்துறையில் சவால்களும் வாய்ப்புகளும் என்னும் தலைப்பில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறியதாவது.

ஒவ்வொரு முறை ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த கொள்கை முடிவினை அறிவிக்கும் போது, வங்கியாளர்கள், ஆலோசகர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைவர் கள், வங்கி அல்லாத நிறுவனங்கள், நிதிச்சந்தை வல்லுநர்கள் பொருளாதார வல்லுநர்கள் என அனைவரிடமும் என்ன செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்கும். ஆனால் ஏழைகளின் கருத்துகள் கேட்கப்படுவதில்லை.

நான் கவர்னராக இருக்கும் போது 25-க்கும் மேற்பட்ட முன் னணி நிறுவனங்களின் தலைவர் கள் என்னிடம் வட்டியைக் குறைக்க வேண்டும் என்று கேட்டார்கள். வட்டியைக் குறைக்க முடியாது என்று அவர்களின் தெரிவித்து விட்டேன். மேலும் உங்களில் எத் தனை நபர்கள் அடுத்த மூன்று மாதங்களில் புதிய முதலீட்டு திட்டம் குறித்த முடிவை எடுக்கப்போகி றீர்கள் என்று கேட்டேன். யாருடைய கைகளும் உயரவில்லை.

அவர்களை நான் குற்றம் கூற வில்லை. முதலீடுகளை ஊக்கு விக்க வட்டி குறைப்பு செய்தாக வேண்டும் என்ற அவசியம் கிடை யாது. அது சரியான தீர்வும் அல்ல.

ரிசர்வ் வங்கி தொழில்துறையிடம் கருத்துகளை கேட்கவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்களது துறை சார்ந்த சங்கம் உள்ளிட்ட இதர வழிகளில் தங்களது கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால் ஏழை மக்களுக்கு அதுபோன்ற வாய்ப்பு இல்லை. அவர்கள் பணவீக்கத்தால் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

50 ஏழைகளை அழைத்து வந்து ரிசர்வ் வங்கி கருத்து கேட்பதில்லை. ஏழைகளுக்கும் ரிசர்வ் வங்கி பற்றி யும் எதுவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் வட்டி விகிதத்தை விலைவாசி உயர்வுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாது. என்னை பொருத்தவரை அமைதியாக இருக்கும் ஏழைகளின் கருத்தையும் ரிசர்வ் வங்கி கேட்கவேண்டும். அவர்களின் குரலாக ரிசர்வ் வங்கி இருக்க வேண்டும்.

இதேபோன்ற ஒரு சூழ்நிலை தான் அமெரிக்காவிலும் இருந்தது. 1987 முதல் 2006-ம் ஆண்டு ஆலன் கிரீன்ஸ்பன் பெடரல் வங்கியின் தலைவராக இருந்தார். அவர் இருந்த சமயத்தில் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட்டி குறைப்பு பற்றி ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுதுவார்கள். பணவீக்கம் அதிகமாக இருந்த அந்த சமயத்தில் வட்டியை உயர்த்த வேண்டும் என்று ஒரு கடிதம் கூட வரவில்லை.

ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் குரல் அற்றவர்களின் குரலாக ரிசர்வ் வங்கி இருக்க வேண்டும் என்று சுப்பாராவ் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சுப்பாராவ் இருந்தார். அவர் பொறுப்பேற்ற சமயத்தில்தான் சர்வதேச பொருளாதார மந்த நிலை உருவானது. அந்த சமயத்தில் ரூபாய் மதிப்பு மூன்று மாதத்தில் 17 சதவீதம் சரிந்தது. ரூபாய் மதிப்பை கையாளுவதுதான் மிகப்பெரிய சவால் என்று சுப்பாராவ் கூறினார்.

வரும் ஏப்ரல் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்த அறி விப்பை வெளியிடுகிறது. சிறு சேமிப் புகளுக்கான வட்டி விகிதம் குறைக் கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் வட்டி குறைப்பு இருக்கும் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in