

பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் செபி கேட்டுக்கொண் டிருக்கிறது. விதிமுறைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று செபியிடம் மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.
செபியின் விதிமுறைகள்படி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும். அதேபோல நிறுவனத் தின் பங்குகளில் 25 சதவீதம் பொது மக்கள் வசம் இருக்க வேண்டும்.
25 சதவீத பங்குகள் என்கிற விதிக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால் பெண் இயக்குநர் விவகாரத்தில் கொடுத்த காலக்கெடு எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது அபராதம் செலுத்த வேண்டும் என்று செபி உயரதிகாரி தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களாக இருந் தாலும், பொதுத்துறை நிறுவனங் களாக இருந்தாலும் செபியின் பார் வையில் அனைத்து நிறுவனங் களும் ஒன்றுதான் என்று செபி அதிகாரி ஒருவர் கூறினார்.
நான்கு பொதுத்துறை நிறுவனங் களில் மட்டும் பெண் இயக்குநர்கள் இல்லை என்று தனியார் நிறுவன புள்ளிவிவரம் கூறுகிறது.