

பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தை பகுப்பாய் வாளர்களுக்கான விதிமுறைகள், பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட நிறுவனங்ளின் ஊழியர் களுக்கு பங்கு ஒதுக்கீடு (இ-சாப்) ஆகியவற்றிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நிறுவன மேம்பாட்டாளர்கள் அல்லாதவர்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் மாற்றியமைக்கப்பட் டுள்ளன. அத்துடன் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 சதவீத பங்குகள் ஒதுக்கீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு குறைந்தபட்சம் 25 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை செபி இயக்குநர் குழுமம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த அளவை 3 ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்ற காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அரசு ரூ. 60 ஆயிரம் கோடி வரை திரட்ட முடியும். அரசின் 38 நிறுவனங்கள் மூலம் இத்தொகை திரட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஃபர் பார் சேல் (ஓஎப்எஸ்) எனப்படும் விற்பனைக்கான விதிமுறைகள் தளர்த்தவும் இயக்குநர் குழுமம் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் சில்லறை முதலீட்டாளர்ளுக்கான ஒதுக்கீடு 10 சதவீத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடி சலுகையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதேபோல நிறுவனர் அல்லாதவர்கள் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருந்தால் அவர்கள் ஒஎப்எஸ் வழியைத் தேர்வு செய்யவும் புதிய விதிமுறை வழிவகுத்துள்ளது.
இதுவரை அனுமதிக்கப்பட்ட அளவில் ஒஎப்எஸ் வழிமுறை யானது 200 நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. அதுவும் சந்தை விலை நிலவர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஓஎப்எஸ் முறையானது 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. நிறுவனர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விரைவாக விற்பனை செய்ய இந்த வழிமுறை வசதியாக இருந்தது. இதுவரை 100-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த முறை மூலம் பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதன் மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளது.
சந்தை பகுப்பாளர்கள் (அனலிஸ்ட்) எந்த ஒரு நிறுவனத்துக்கு ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும் நிறுவன மேம்பாட்டா ளர்களோ அல்லது பிற முதலீட்டாளர்களோ பொதுப்பங்கு வெளியீட்டின் போது (ஐபிஓ) போனஸ் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என்றிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. இவ்விதம் விற்பனை செய்யப்பட உள்ள பங்குகள் அவர்கள் வசம் ஓராண்டுக்குக் குறைவான காலமே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ. வெளியிடும் போது 25 சதவீதம் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும். அல்லது ரூ400 கோடி பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும். இதில் எது குறைவோ அதை செயல்படுத்த வேண்டும்.
இப்போது உள்ள விதிமுறை களின்படி ஓராண்டுக்குக் குறைவான காலத்தில் வைத்தி ருக்கும் முதலீட்டாளர்கள் ஐபிஓ வெளியீட்டின்போது விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறை அனைத்து பங்கு வெளியீடு களுக்கும் பொருந்தும். அதாவது போனஸ் பங்கு, உரிமப் பங்கு உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்.
இது தவிர அரசு ஊழியர் களுக்கான பங்கு ஒதுக்கீட்டுக்கான புதிய விதிமுறைகளையும் செபி வெளியிட்டுள்ளது.
அத்துடன் வாடிக்கையாளர் பற்றிய விவரத்தை (கேஒய்சி) பிற நிதி கண்காணிப்பு அமைப்புகள் கேட்டால் அளிக்கவும் செபி இயக்குநர் குழு ஒப்புதல் அளித் துள்ளது.