Published : 24 Nov 2021 13:19 pm

Updated : 24 Nov 2021 14:24 pm

 

Published : 24 Nov 2021 01:19 PM
Last Updated : 24 Nov 2021 02:24 PM

கிரிப்டோகரன்சிகள் மதிப்பு வீழ்ச்சி; புதிய மசோதா வரும் எதிரொலி

centre-will-move-to-ban-cryptocurrency

புதுடெல்லி

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதன் எதிரொலியாக முக்கிய கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது.

கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க ஆலோசனை மேற்கொண்டது.

நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை மத்திய அரசு தடை செய்யப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம் இதற்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் எனத் தெரிகிறது.

கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப்படுகிறது.

மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இதே தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா இருக்கும் எனத் தெரிகிறது.

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கிரிப்ட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கும் எனத் தெரிகிறது.

கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பின்பு பங்குச்சந்தை போலவே கிரிப்டோ சந்தையும் இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இதன் எதிரொலியாக முக்கிய கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது.

கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் வாஸிர்எக்ஸ் தரவுகளின்படி டிஜிட்டல் நாணயச் சந்தை தற்போது சரிவு கண்டுள்ளது. பிட்காயின், எத்ரம், சோலனா, பினான்ஸ் உள்ளிட்ட முக்கிய கிரிப்ட்டோ கரன்சிகள் அனைத்தின் விலையும் சரிவு கண்டுள்ளது. எத்ரம் 0.86 சதவீதம் சரிந்து 4,167 டாலராக வர்த்தகம் செய்கிறது. சோலனாவும் 1.24 சதவீதம் சரிந்து 4,167 டாலராக வர்த்தகமானது.

மீமீகாயின் என அழைக்கப்படும் டோகே மற்றும் ஷிபா ஈனு அவற்றின் மதிப்புகளும் உயரவில்லை. அவற்றின் வளர்ச்சி முறையே 0.30 சதவிகிதம் மற்றும் 1.64 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.


தவறவிடாதீர்!



புதுடெல்லிகிரிப்டோகரன்சிபுதிய மசோதாமதிப்பு வீழ்ச்சிCryptocurrencyBan

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x