Published : 21 Jul 2021 06:49 PM
Last Updated : 21 Jul 2021 06:49 PM

இமாச்சலப் பிரதேசத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிய சோனாலிகா டிராக்டர் உற்பத்தி ஆலை

சென்னை

டிராக்டர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா குழுமம் இமாச்சலப் பிரதேசத்தில் அம்ப் நகரில் டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது. ரூ.200 கோடி முதலீட்டில் 29 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் புதிதாக சாம்ராட் என்ற பெயரிலான டிராக்டர்களை அறிமுகம் செய்கிறது. இந்த வகை டிராக்டர்களில் 23 அடுக்கு பெயிண்ட் பூசப்படுகிறது. இதனால் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் டிராக்டர்கள் சேறும், சகதியில் இருந்தாலும் எளிதில் துரு பிடிக்காது. இந்த வகை பெயிண்டுக்கு சிஇடி தொழில்நுட்பம் என்று பெயர். இந்த வகை நுட்பத்தில் தயாராக சோனாலிகா சாம்ராட் டிராக்டர்களை அறிமுகச் சலுகையாக ரூ. 25.50 லட்சத்துக்கு வெளியிட்டுள்ளது.

உழவுப் பணிகள் மட்டுமின்றி தானியங்கள் அறுவடை செய்வதற்கும் இப்புதிய ரக டிராக்டர்களைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கோதுமை, நெல் ரகங்கள் அறுவடை மட்டுமின்றி சூரிய காந்தி, சோயா, மொச்சை, கடுகு, பச்சைப் பயறு, உளுந்து, கடலை போன்ற பயிறு வகைகள் அறுவடைக்கும் இதைப் பயன்படுத்த முடியும். பன்முகப் பணிகளை நிறைவேற்றும் திறன் கொண்டதாக இந்த டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டர் தெரிவித்துள்ளார்.

சாம்ராட் ரக டிராக்டர் 101 குதிரைத் திறன் கொண்டது. இதில் 5 கியர்களை உடைய மெஷ் கியர் பாக்ஸ் உள்ளது. மேலும், நீடித்து உழைக்கும் வகையில் அதிக தாங்கும் திறன் கொண்ட பேரிங்குகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் உழவு, அறுவடைப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை விவசாயிகளின் வேலைப் பளுவைக் குறைத்து உற்பத்தியை அதிகரிக்க வழிசெய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x