

பழைய வாகனங்களை பயன் பாட்டிலிருந்து நீக்குவதற்கான அரசின் கொள்கை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2016 தொடக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை குறைக்கும் விஷ யத்தில், பழைய வாகனங்களை மாற்றும் வாகன உரிமையாளர் களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே ரூ.30,000 வரை ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
வரப்போகிற மத்திய பட்ஜெட் டில் இதற்கான சலுகைகளை வழங்க நிதி அமைச்சகத்துக்கு கட்கரி கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக் கின்றன. குறிப்பாக 15 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட கார் களை மாற்றி புது கார்கள் வாங்கு பவர்களுக்கு கலால் வரிச் சலுகை அளிக்க வேண்டும் என கட்கரி நிதி அமைச்சகத்தைக் கேட்டுள்ளார்.
பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனத்தை வாங்குகிற போது 50 சதவீதம்வரை கலால் வரிசலுகை அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வரலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சகக் தகவல்கள் தெரிவிக் கின்றன.
வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களிடம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் பேட்டரி தொழில்நுட்பங் களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டங்களுக்கு முதலீடு செய்யுமாறு கட்கரி கேட்டுக் கொண்டார்.