

இந்தியாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 32.27 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் இது 69.35 சதவீதம் அதிகமாகும்.
2021 ஏப்ரல்- மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் உட்பட) 98.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 56.94 சதவீத வளர்ச்சி. 2021 ஏப்ரல்-மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி 104.14 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே கால அளவை விட 77.82 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி.
2021 மே மாதத்தில் ஏற்றுமதிகள் 32.27 பில்லியன் டாலர். 2020ம் ஆண்டு மே மாதத்தில் இது 19.05 பில்லியன் டாலராக இருந்தது. இது 69.35 சதவீதம் நேர்மறையான வளர்ச்சி. ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி ரூ.2,36,426.16 கோடி. 2020ம் ஆண்டு மே மாதத்தில் இது ரூ. 1,44,166.01 கோடியாக இருந்தது. இது 64 சதவீத நேர்மறையான வளர்ச்சி.
* 2021ம் ஆண்டு மே மாதத்தில் இறக்குமதி மதிப்பு 38.55 பில்லியன் டாலர் ( ரூ. 2,82,453.56 கோடி). டாலர் மதிப்பில் இது 73.64 சதவீத வளர்ச்சி. ரூபாய் மதிப்பில் 68.15 சதவீத வளர்ச்சி. 2020ம் ஆண்டு மே மாதத்தில் இறக்குமதி 22.20 பில்லியன் டாலர் (ரூ.1,67,977.68 கோடி)
2020 மே மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 9.45 பில்லியன் டாலர் (ரூ. 69,255.28 கோடி). டாலர் மதிப்பில் இது 171.10 சதவீத உயர்வு. ரூபாய் மதிப்பில் 162.52 சதவீத உயர்வு. 2020 மே மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 3.49 பில்லியன் டாலராக( ரூ.26,380.50 கோடி) இருந்தது.
ரிசர்வ் வங்கி 2021ம் தேதி ஜூன் 1ம் தேதி வெளியிட்ட அறிக்கைப்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 17.55 பில்லியன் டாலராக ( ரூ.1,30,676.37 கோடி) இருந்தது. டாலர் மதிப்பில் இது 6.67 சதவீத நேர்மறையான வளர்ச்சி. 2021 மே மாத்துக்கான சேவைகள் ஏற்றுமதி 17.85 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சேவைகள் இறக்குமதி மதிப்பு 9.90 பில்லியன் டாலர் (ரூ.73,697.69 கோடி). டாலர் மதிப்பில் இது ரூ.6.4 சதவீத வளர்ச்சி. 2021 மே மாத்தில் சேவைகள் இறக்குமதி மதிப்பு 9.97 பில்லியன் டாலராகும்.