

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையை விரைவாக அமல்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், வருமானம் அதிகரிக்கும் அத்துடன் உள்நாட்டு உற்பத்தி பெருகும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டு தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பில் புதிய முறையை அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஐஎம்எப் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தி யாவில் ஜிஎஸ்டி முறையை அமல்படுத்துவதால் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும், அரசின் வரி வருமானம் உயருவதால் நிதி நிலை மேம்படும், கல்வித்துறை வளர்ச்சி யடையும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொழில் துறையைச் சார்ந் தவர்களுடனான வீடியோ மூலமான உரையாடலில் அவர் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி அமலாக்கம் என்பது ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும். இது ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையாகும்.
இதனால் வரி செலுத் துவோரது எண்ணிக்கை மற்றும் வரி விதிப்புக்குள்ளாகும் பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் வரி விதிப்பு முறையை மிகவும் எளிமையாக்க உதவக் கூடியது ஜிஎஸ்டி. இது வரி விதிப்பு முறையை மேலும் திறன்மிக்கதாக உயர்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் செய்வதற்கு ஐஎம்எப் தயாராக உள்ளது என்று லெகார்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியத் தொழிலகக் கூட்ட மைப்பின் (சிஐஐ) தலைவர் சுமித் மஜும்தார், தற்போது ஏற்பட்டு வரும் நிகழ்வுகள், ஜிஎஸ்டி அமலாக் கத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் ஆகியன மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்றார்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.5 சதவீதம் முதல் 2 சதவீத அளவுக்கு உயர்வதற்கு ஜிஎஸ்டி உதவும் என்று சிஐஐ உறுதியாக நம்புகிறது. இத்தகைய சூழலில் இதைவிட வேறு சிறந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்று மஜும்தார் குறிப்பிட்டார்.
அரசியல் காரணங்களால் ஜிஎஸ்டி அமலாக்கம் தாமதமா வதற்கு ஃபிக்கி தலைவர் ஜோத்ஸனா சூரி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இது அமல்படுத்துவது நாட்டுக்கு நல்லது. அத்துடன் தொழில் துறைக்கும் இது மிகச் சிறந்தது என்று குறிப்பிட்டார்.
நாட்டின் வறுமை ஒழிப்புக்கு ஜிஎஸ்டி அமலாக்கம் மிகச் சிறந்த கருவியாக இருக்கும் என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஓங்கார் கன்வர் தெரிவித்தார். இதை அமல்படுத்துவதற்கு அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்த நல்ல நடவடிக்கைக்கு நிச்சயம் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஜிஎஸ்டி அமலாக்கம் இப்போது மேற்கொள்ள வேண்டிய ஒன்று. இதை அமல்படுத்துவதன் மூலம் இந்தியா மீதான நம்பகத்தன்மை பிற நாடுகளின் மத்தியில் உருவாகும்.
தொழில்புரிவதற்கு இந்தியா ஏற்ற நாடு என்ற எண்ணம் ஏற்படும் என்று ஃபோர்டு இந்தியா நிறுவனத் தலைவர் நிகெல் ஹாரிஸ் தெரிவித்தார். இதை யாருமே வேண்டாம் என்று கூறவில்லை. இத்தகைய சூழலில் இதை நிறைவேற்ற சரியான தருணம் இதுதான் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
அனைத்து மறைமுக வரியையும் ஒருங்கிணைத்து ஒரு முனை வரியாக வரி விதிப்பு முறையை எளிமைப்படுத்தும் ஜிஎஸ்டி முறையை அமல்படுத் துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று அகில இந்திய வர்த்தக சம்மேளனங்களின் தலைவர் பிரவீண் கண்டேல்வால் குறிப்பிட்டார்.