கரோனா; விமான சேவையில் புதிய சாதனை: பிப்ரவரி 12-ல் அதிக பயணிகள் பயணம்

கரோனா; விமான சேவையில் புதிய சாதனை: பிப்ரவரி 12-ல் அதிக பயணிகள் பயணம்
Updated on
1 min read

கரோனாவுக்கு பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து அதிகளவில் பயணிகள் பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டனர்.

2,349 விமானங்களில் 2,97,102 பயணிகள் 2021 பிப்ரவரி 12 அன்று பயணம் மேற்கொண்டதாக விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து இது வரையிலான தினசரி பயணிகளின் எண்ணிக்கையில் இது தான் அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பான, சிறப்பான மற்றும் விரைவான சேவை ஆகிய காரணங்களால் விமான பயணத்தை மக்கள் விரும்புவதாகவும், இதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை கொவிட்டுக்கு முந்தைய அளவுகளை எட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

2021 பிப்ரவரி 12 அன்று மொத்தம் 4697 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 5,93,819 பேர் விமான நிலையங்களுக்கு வந்திருந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக 2020 மார்ச் 24 முதல் நிறுத்தப்பட்ட விமான சேவைகள், 2021 மே 25 அன்று மீண்டும் தொடங்கின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in