ஆன்லைன் வர்த்தகத்தில் 5 நிமிடத்தில் 60,000 மேகி விற்பனை

ஆன்லைன் வர்த்தகத்தில் 5 நிமிடத்தில் 60,000 மேகி விற்பனை
Updated on
1 min read

ஸ்னாப்டீல் ஆன்லைன் வர்த்தகத்தில் நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ் 5 நிமிடங்களில் 60,000 பாக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன.

2 நிமிட இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் 5 நிமிடங்களில் 60,000 பாக்கெட்டுகள் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்றுத் தீர்த்துள்ளது என்றும், ‘இந்தியாவின் பிரபல மேகி நூடுல்ஸ் மீள் வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்’ என்றார் ஸ்னாப்டீல் துணைத் தலைவர் டோனி நவின்.

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காரீயம், மோனோசோடியம் குளூட்டமேட் ரசாயனங்களின் அளவுக்கதிகமான உட்கலப்பு விவகாரங்களைக் கடந்து, மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது.

தடையிலிருந்து மீண்டு வந்துள்ள நெஸ்லே நிறுவனம் தனது பிரபல பிராண்டான மேகி நூடுல்ஸை சுமார் 300 விநியோகஸ்தர்கள் மூலம் 100 நகரங்களில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் 8 மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி மூன்று அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களில் மேகி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in