

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இன்பிபீம் இன்கார்ப்பரேஷன் லிமிடட் ரூ.450 கோடிக்கு பொது பங்குகளை (ஐபிஓ) வெளியிட பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் வழங்கியுள்ளது. பொது பங்குகளை வெளியிடும் முதல் இ-காமர்ஸ் நிறுவனம் இதுவே.
ரூ.450 கோடிக்கு...
குஜராத்தை சார்ந்த இன்பிபீம் நிறுவனம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி அன்று செபியுடன் டிஹெச்ஆர்பி முறையில் தனது பங்குகளை ரூ.450 கோடிக்கு பொதுப் பங்குகளாக வெளியிட அனுமதி கோரியது.
இ-காமர்ஸ் துறையில் பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் நிறுவனத்தோடு போட்டியிடும் நிறுவனம் இன்பிபீம்.
முதற்கட்ட பங்கு விற்பனை அனுமதியை இறுதி ஆய்வுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சந்தை கண்காணிப்பாளர்கள் புதிய வழிமுறைகளால் வர்த்தக நிறுவ னங்கள் பங்கு வர்த்தகத்தில் எளிதாக இடம்பெற முடியும் என்று அறிவித்தன.
அதன்படி இன்பிபீம் நிறுவனம் வர்த்தக பட்டியலில் இடம்பெற முடிவு செய்தது. 2007-ல் தொடங்கப்பட்ட இன்பிபீம் நிறுவனம் இன்பிபீம்.காம், இண்டெண்ட், பில்ட்பஜார், இன்செப்ட், பிக்ஸ்குயர் போன்ற இ-காமர்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த வருடம் சோனி மியூசிக் இண்டெண்ட்டிடமிருந்து 26 சதவீத பங்குகளை வாங்கியது. தேசிய பங்குச் சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் தனது பங்குகளை வெளியிட கோரியுள்ளது.
பங்கு வெளியிடல் நடவடிக் கையை எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட், எலாரா கேபிடல், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் மற்றும் கோடக் மஹிந்திரா கேபிடல் நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.
ஆரம்ப பொது சலுகையின் கீழ் 75 சதவீத பங்குகள் விகித அடிப்படையில் தகுதி பெற்ற நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் 60 சதவீதம் வரை விருப்ப அடிப்படையில் வழங்கப்படும்.