500 கி.மீ. தூரம் செல்லும் வகையில் 10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி: டொயோட்டா உருவாக்குகிறது

500 கி.மீ. தூரம் செல்லும் வகையில் 10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி: டொயோட்டா உருவாக்குகிறது
Updated on
1 min read

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஸ்திரமான பேட்டரியை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது பேட்டரியில் ஓடும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். அத்துடன் இதை சார்ஜ் செய்ய 10 நிமிடம் போதுமானது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரியில் ஓடும் வாகனங்களுக்காக லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகின்றன. இதில் நிலவும் பாதக அம்சங்களை ஆராய்ந்து குறைகளை போக்கும் வகையில் புதிய பேட்டரி உருவாக்கத்தில் டொயோட்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறுகிய தூரம் பயணிப்பதற்கு, விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் புதிய பேட்டரியை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்திரமான பேட்டரி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மாதிரி வடிவத்தை அடுத்த ஆண்டு இந்நிறுவனம் வெளியிடும். இந்த பேட்டரியானது வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியை விட சிறப்பாக செயல்பட கூடியதாக இருக்கும். அதிக இடத்தை ஆக்கிரமிக்காத வகையில் அளவில் சிறியதாக தயாரிப்பதில் டொயோட்டா தீவிரம் காட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in