நவம்பர் 6-ல் ஆப்பிள் வாட்ச் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் நவம்பர் மாதம் 6-ம் தேதி புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்தியாவில் நவம்பர் 6-லிருந்து கிடைக்கும் என ஆப்பிள் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.ஆப்பிள் ஸ்போர்ட் வாட்ச், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் வாட்ச் எடிசன் என மூன்று வெவ்வேறான மாடல்களில் அறிமுகப்படுத்த உள்ளது.மேலும் இந்த வாட்சுகள் 38 மி.மீ மற்றும் 42 மி.மீ அளவுகளில் கிடைக்கும். இதன் விலை ரூ.23,000-லிருந்து ரூ. 11 லட்சம் வரையிலும் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாட்சுகள் ஒருதரம் சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் இயங்கக் கூடியது. டிஜிட்டல் முறையில் நேரத்தை பார்த்துக் கொள்ளலாம்.மேலும் இதன் மூலம் தொலைபேசி அழைப்புகளை ஏற்கமுடியும், இ-மெயில் மற்றும் பாட்டு கேட்கும் வசதி போன்றவை இந்த வாட்சின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.
