பிரதமரின் குசும் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிரதமரின் குசும் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
Updated on
1 min read

மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு, பிரதமரின் குசும் திட்டத்தின் மூன்றாவது (சி) கூறின் கீழ் இணைப்பு அளவிலான சூரியமயமாக்கலுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்தது.

பிரதமரின் விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்துக்கு (குசும்), பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2019 பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது ஒப்புதல் அளித்தது.

ஏ, பி, சி என்னும் மூன்று கூறுகளை உள்ளடக்கி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சி கூறை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை 2019 நவம்பர் 8-ஆம் தேதி புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது.

மாநிலங்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, பிரதமரின் குசும் திட்டத்தின் மூன்றாவது (சி) கூறின் கீழ் இணைப்பு அளவிலான சூரியமயமாக்கலை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in