Published : 10 Oct 2015 09:32 AM
Last Updated : 10 Oct 2015 09:32 AM

தொழில்முனைவோரின் ஆலோசனையை பெற்று புதிய தொழில் கொள்கையை உருவாக்க முயற்சி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள தொழில்முனைவோர், தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப புதிய தொழில்கொள்கையை உரு வாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ‘ஈரோட்டின் தொழில் மற்றும் விவசாய வளர்ச் சிக்கு மத்திய அரசின் பங்கு’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ கருத்தரங்கம் நேற்று நடந்தது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்தரங்கில் பேசியதாவது:

நாடு முழுவதும் முக்கிய நகரங் களில் உள்ள தொழில்முனைவோர், தொழில்அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப புதிய தொழில்கொள் கையை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஈரோட் டில் விமான நிலையம் போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும், ஏற்று மதி துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது வரவேற்கத்தக்க தாகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி திறனின் பங்கு 36 சதவீதம். இந்தியாவில் இது 17 சதவீதமாக உள்ளது. எனவே, 2022-ம் ஆண்டில் இந்திய உற்பத்தியின் பங்கினை 25 சதவீத மாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்கள் அதிக அளவில் தொடங் கவும், எவ்வித சிரமம் இன்றி தொடங் கவும் மத்திய அரசு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

நறுமணப் பொருள்கள் மேம் பாட்டு வாரியத்தின்கீழ் இப்போது 51 பொருள்கள் உள்ளன. இதில் எந்த பொருள் எங்கு விளைகிறதோ, அங்கு உற்பத்தியாளர்கள், வியாபா ரிகள், ஏற்றுமதியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மஞ்சள் மேம்பாட்டு வாரியம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களில் 15 சதவீதம் வரை ஏதாவது ஒரு குறை காரணமாக திரும்பி வந்தது. இப்போது எந்த பொருளும் திரும்பி வராத அளவுக்கு தரமான பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இங்கு இயக்கும் தோல் ஆலை கள் கூட்டாக விண்ணப்பித்தால், பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்படும். ஒரு ஆலைக்கு என தனியாக நிதி ஒதுக்க இயலாது. தோல் பதனிடுவதற்கு இயற்கை சாயத்தை பயன்படுத்துவது தொடர்பாக தோல் பதனிடும் உற்பத்தியாளர்கள் யோசிக்க வேண்டும். ஏற்கெனவே, பொலிவான நகர திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் பட்டியலில் ஈரோடு உள்ளது. முதல் கட்டத்தில் ஈரோடு நகரம் வருவதற்கு அதற்கான கருத்துருக்களை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து அனுப்பிவைக்க வேண்டும். துறைமுகங்களை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் குளச்சல் துறைமுகத்தையும் மேம்படுத்த முடியும். அதற்கு தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x