பாங்க் ஆப் பரோடா வழக்கு: போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

பாங்க் ஆப் பரோடா வழக்கு: போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
Updated on
1 min read

பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்த நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினரை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் எஸ்ஐடி ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. ஷா உள்ளார்.

பாங்க் ஆப் பரோடா வங்கியின் டெல்லியில் உள்ள கிளையிலிருந்து ஹெச்எஸ்பிசி வங்கி மூலமாக அந்நியச் செலாவணி துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விதம் அனுப்பிய நிறுவனங்கள் அனைத்துமே போலியான ஏற்று மதி நிறுவனங்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிறுவனங்கள் மூலம் அனுப்பப் பட்ட பணம் அனைத்துமே வெளிநாடுகளில் கருப்புப் பணமாக பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை குழுவின் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் நடைபெற்ற அந்நியச் செலாவணி மோசடி விவ காரம் தீவிரமாக விவாதிக்கப்பட்ட தாகத் தெரிகிறது. தனி நபர் அல் லது நிறுவனங்கள் போலியாக நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப் பட்டது குறித்த விஷயங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. ஒரே முகவரியில் செயல்படும் நிறு வனங்கள் அல்லது பல முகவரி களில் போலியாக செயல்படும் நிறுவனங்கள், முறைகேடான இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பாங்க் ஆப் பரோடாவில் 59 போலி நிறுவனங்கள் இதுபோன்று அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. டெல்லி அசோக் விகாரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி பரிவர்த்தனை ஆகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோல முறையற்ற வகை யில் பரிமாற்றம் செய்யப்பட்ட நிதி குறித்து ஆராயுமாறு புலனாய்வு அமைப்புகளை எஸ்ஐடி வலியுறுத் தியுள்ளது. முறையற்ற நிதி பரிவர்த்தனை மற்றும் நன்கொடை, பண முதலீடு குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in