

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2020-21 ஆண்டுக்கான முதல் அரையாண்டு வருமானம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த நிறுவனம் ரூபாய் 2,04,686 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வருமானம் ரூபாய் 2,82,514 கோடியாக இருந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை, இந்த நிறுவனத்தின் லாபம் ரூபாய் 8138 கோடியாக இருந்தது. இது, கடந்த வருடம் ரூபாய் 4160 கோடியாக இருந்தது.