

லடாக்கில் மருத்துவக் கல்லூரியையும், ஒரு பொறியியல் கல்லூரியையும் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக துணை நிலை ஆளுநர் ஆர்.கே. மாத்தூர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை லடாக் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர் சந்தித்தார்
மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்கை, லடாக் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர் இன்று சந்தித்தார்.
சந்திப்பின் போது யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி குறித்த விஷயங்களை இருவரும் விரிவாக விவாதித்தனர்.
பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்த டாக்டர் சிங், லடாக்குக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அதிகபட்ச முன்னுரிமையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி இருப்பதாக கூறினார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் முதல் முறையாக ஒரு மருத்துவக் கல்லூரியையும், ஒரு பொறியியல் கல்லூரியையும் லடாக்கில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.