

பிஏசிஎல் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான `செபி’ அபராதம் விதித்திருக்கிறது. பொதுமக்க ளிடம் முறைகேடாக முதலீட்டை திரட்டியதற்காக 7,269 கோடி ரூபாய் அபராதத்தை `செபி’ விதித்திருக்கிறது.
இத்தனை வருடங்களாக முறைகேடாக திரட்டிய நிதியான 49,100 கோடி ரூபாயை முதலீட் டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே செபி உத்தரவிட்டி ருந்தது. இந்தத் தீர்ப்பினை பங்குச்சந்தை தீர்ப்பாயம் கடந்த மாதம் உறுதி செய்தது.
சமீபத்தில் வெளியிட்ட அறிக் கையில் முறைகேடாக திரட்டிய தொகை மூலம் கடந்த ஒரு வரு டத்தில் அபரிமிதமான லாபத்தை பிஏசிஎல் சம்பாதித்திருக்கிறது. கடந்த வருடத்தில் திரட்டிய தொகையில் கிடைத்த லாபம் மட்டும் ரூ.2,423 கோடியாகும்.
இதுபோன்ற முறைகேடுகளை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் `செபி’ கண்டித்திருக்கிறது. சாதாரண மக்கள் சேமித்த பணத்தை இதுபோன்ற நிறுவனங்கள் முறைகேடாக திரட்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வளவு பெரிய அபராதம் விதிப்பதென்பது இந்த நேரத்தின் அவசியமாகும் என்றும் `செபி’ கூறியிருக்கிறது.