

இந்தியாவில் முதலீடு செய்யத் தயாராக இருந்த முதலீட்டாளர் களிடம் இழந்த நம்பிக்கையை தனது அரசு மீண்டும் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்தியாவின் பொருளாதரம் 8 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதை 20 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்ற தனது கனவு மெய்ப்படும் என நம்புவதாக அவர் கூறினார்.
ஃபேஸ்புக் தலைமையக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பலரது கேள்வி களுக்கும் மோடி பதிலளித்தார்.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் மிக மெதுவாக மேற்கொள்ளப் படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, இந்தியா மிகப் பெரிய நாடு, அங்கு சீர்திருத்தங்களை படிப்படியாகத் தான் மேற்கொள்ள முடியும். அதற்குரிய பலன் நிச்சயம் இருக்கும் என்றார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தனது அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், முதலில் அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தினோம். இதற்காக வெளிப்படையான செயல்தன்மையை கொண்டு வந்தோம். இத்தகைய நடைமுறை யை வேளாண்துறை, சேவைத் துறை, உற்பத்தித் துறைகளில் கொண்டு வந்தோம். இவற்றில் டிஜிட்டல்மயமாக்குவதற்காக கட்ட மைப்பு வசதிகளை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இணையாக மேற்கொண்டோம் என்றார்.
முதலீட்டாளர்களின் சொர்க்க மாக இந்தியா திகழ வேண்டும் என்பதே தனது லட்சியம் என்ற அவர் அதற்கான நடவடிக் கைகளை தனது அரசு எடுத்து வருவதாகவும், தொழில் தொடங்குவதற்கு தடைக்கல்லாக உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவதோடு உகந்த சூழலை உருவாக்கியுள்ளதாகவும் குறிப் பிட்டார்.