

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கரன்சி வீழ்ச்சியால் தகவல் தொழில்நுட்பத் துறையின் வருமானம் குறையும் என்று இத்துறையின் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் வருமானம் 12 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை சரியும் என்று நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர் தெரி வித்துள்ளார்.
15000 கோடி டாலர் வருமானம் ஈட்டும் தகவல் தொழில் நுட்பத் துறையின் வருவாயில் 20 சதவீதம் ஐரோப்பிய நாடு களிலிருந்து கிடைக்கிறது. வட அமெரிக்காவிலிருந்து 70 சதவீதம் வருகிறது.