ரூ.2,500 கோடிக்கு பொதுப்பங்கு வெளியிட இண்டிகோவுக்கு செபி அனுமதி

ரூ.2,500 கோடிக்கு பொதுப்பங்கு வெளியிட இண்டிகோவுக்கு செபி அனுமதி
Updated on
1 min read

குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானங்களை இயக்கும் இண்டிகோ ஏர்லைன் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 2.500 கோடியை திரட்டுவற்கு பங்குச்சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் ரூ. 1,272 கோடிக்கு பொதுப் பங்குகளை வெளியிட உள்ளது. இண்டிகோ நிறுவனம் தாக்கல் செய்த அனுமதி கடிதத்துக்கு செபி அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐபிஓ வெளியிடுவதற்கு இந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு கடந்த 11-ம் தேதிதான் செபி ஒப்புதல் அளித்துள்ளது.

இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் இண்டிகோ எனும் பிராண்டு பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்குகிறது. பங்கு விற்பனையில் சிட்டி குரூப், ஜேபி மோர்கன் இந்தியா, மோர்கன் ஸ்டான்லி, பார்கிளேஸ், புபிஎஸ் செக்யூரிட் டிஸ் இந்தியா, கோடக் மஹிந்திரா கேபிடல் நிறுவனங்கள் ஈடுபடும்.

இந்தியாவில் செயல்படும் தனியார் விமான நிறுவனங்களில் லாபகரமாக செயல்படும் நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்றாகும். மற்றொறு நிறுவனம் கோ ஏர் ஆகும்.

கடந்த நிதி ஆண்டில் (2014-15) இந்நிறுவனத்தின் லாபம் நான்கு மடங்கு அதிகரித்து ரூ. 1,304 கோடியாக இருந்தது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்நிறுவனம் லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

2005-ம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கிய இந்நிறுவனம் மட்டுமே அதிகபட்ச நிதி ஆண்டுகளில் லாபம் ஈட்டிய தனியார் நிறுவ னமாகத் திகழ்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2013-14) இந்நிறுவனத்தின் லாபம் ரூ.317 கோடியாக இருந்தது.

இந்தியாவில் பெரும்பாலான தனியார் விமான நிறுவனங்கள் மிகுந்த நிதி நெருக்கடியைச் சந்தித்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் அதிக வருவாயை ஈட்டி யுள்ளது. இந்நிறுவனத்தின் வருமானம் ரூ.14,320 கோடி யாகும். முந்தைய நிதி ஆண்டில் ஈட்டி யதைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும். முந்தைய நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 11,447 கோடியாக இருந்தது.

இண்டிகோ நிறுவனம் 530 ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் அளித்துள்ளது. 2005-ல் அளித்த ஆர்டரின்படி 100 ஏர்பஸ் 320 ஏ ரக விமானங்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 430 விமானங்களை இந்நிறுவனம் பெறும் என தெரிகிறது.

தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்களும் சில காலங்களுக்கு முன் சேவையை நிறுத்திய கிங் ஃபிஷர் நிறுவ னங்களும் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in