

பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) நாடு முழுவதும் முதலீட்டாளர் குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இதன் மூலம் தனி நபர்களின் முதலீட்டு பழக்க வழங்கங்களை தொகுக்க உள்ளது.
நாடு முழுவதும் இந்தப் பணிகளை மேற்கொள்ள நீல்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் செபி ஒப்படைத் துள்ளது. நீல்சன் நிறுவனம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்த கைய கருத்துக் கணிப்பு ஆய்வை நடத்தும் என தெரிகிறது.
தேசிய அளவில் நடத்த உள்ள இந்த ஆய்வை விரைவாக நடத்தி முடிக்க நீல்சன் நிறுவனம் திட்டமிட் டுள்ளது. இந்த ஆய்வுக்கு முதலீட் டாளர்கள் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாக செபி தெரி வித்துள்ளது. தனி நபர் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு செபி இது போன்று மூன்று ஆய்வுகளை நடத்தியுள்ளது. கடைசியாக என்சிஏஇஆர் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கை 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு நடத்திய ஆய்வறிக்கையில் 32 சதவீத முதலீட்டாளர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் அடிப்படையிலும், நண்பர்கள் மற்றும் உறவினர் களின் ஆலோசனையின் பேரிலும் பங்குச் சந்தை முதலீடு களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. 35 சதவீத மக்கள் செய்தித் தாள்கள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆக ஒட்டுமொத்தமாக 67 சதவீத மக்கள் எவ்வித ஆதாரமும் இல்லாத மறைமுக ஆலோசனை அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வது தெரியவந்துள்ளது.
இத்தகைய சூழல் மாற வேண்டும் என்று செபி தலைவர் யு.கே. சின்ஹா வலியுறுத்தி யுள்ளார். வீடுகளில் செய்யப்படும் முதலீடுகள் பங்குச் சந்தை முதலீடுகளாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.