பிளிப்கார்ட் வருவாய் 2018- 19ல் ரூ. 42,600 கோடி

பிளிப்கார்ட் வருவாய் 2018- 19ல் ரூ. 42,600 கோடி
Updated on
1 min read

பெங்களூரு
பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 2018- 19 நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் 42.600 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் இன் கார்ப்பரேஷன் வாங்கியது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பிற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் தற்போது வால்மார்ட் வசம் சென்றுள்ளன. இதன் பிறகு இந்திய சந்தையில் வேகம் காட்டி வருகிறது.

கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ``கிரேட் இண்டியன் பெஸ்டிவல் சேல்ஸ்’’, ``பிக் பில்லியன் சேல்ஸ்’’ டே என மாறி மாறி தள்ளுபடி சலுகை விற்பனை தினங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி பொருட்களை விற்பனை செய்தன. செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரையிலான 6 நாள் விற்பனையில் இரு நிறுவனங்களும் விற்பனை செய்த பொருள்களின் மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி.

இரண்டு நிறுவனங்களின் ஆண்டு விற்பனை வளர்ச்சி 30 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. பிளிப்கார்டை வாங்கிய வால்மார்ட் நிறுவனம் மிக அதிக அளவில் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 60 முதல் 62 சதவீத அளவுக்கு உள்ளது. அடுத்த இடத்தை அமேசான் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இரண்டாம் நிலை நகரங்களில் அதிக அளவில் பொருட்கள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 3.2 கோடி பேர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியுள்ளனர். இந்தியாவின் 500 நகரங்களில் 65 ஆயிரம் வர்த்தகர்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 2018- 19 நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் 42.600 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

அந்த நிறுவனம்வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி ஆதாரம் நஷ்டத்தில் உள்ளது. 2018-19 நிதியாண்டில் கிடைத்த வருவாய் காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த நஷ்டமும் குறைந்துள்ளது. 2018 நிதியாண்டில் 46,895 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2019-ம் நிதியாண்டில் 17231 கோடி ரூபாயாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செலவினங்களை கணிசமாக குறைத்ததே நஷ்டம் குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in