

மும்பை
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 5வது முறையாக குறைத்து அண்மையில் அறிவித்தது.
இதன் மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் அடிப்படை வட்டியான, ரெப்போ ரேட் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 5வது முறையாகும். தொடர்ந்து 5 முறையும் சேர்த்து மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் வர்த்தக வங்கிகளும் இதனைத் தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கியுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மார்ஜினல் காஸ்ட் என்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் ஓராண்டு அடிப்படையில் 8.15 சதவீதத்தில் இருந்து 8.05 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அக்டோபர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது.
அதுபோலவே எஸ்பிஐ வங்கி டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 10 முதல் 30 பைசா வரையில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது. அடிப்படை சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.5 சதவீத்தில் இருந்து 3,25 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையில் டெபாசிட்டுகளுக்கான புதிய வட்டி விகிதங்கள் முறையே 10 பைசா மற்றும் 30 சைபா அளவில் குறைக்கப்பட்டு, நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.