

புதுடெல்லி
மாருதி சூசுகி நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 36 சதவீதம் குறைந் துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் 1,45,895 வாகனங்கள் விற்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத் தில் விற்பனை 93,173 ஆக குறைந் துள்ளதாக அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.
அதேபோல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனையும் ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத் தில் 48,324 வாகனங்கள் விற்கப் பட்ட நிலையில், இந்த ஆண்டு 36,085 வாகனங்களே விற்பனை யாகி இருக்கின்றன.
இந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் 15 சதவீதம் குறைந்துள்ளது. வாகன பிரிவுகளில் யுடிலிட்டி வகை வாக னங்கள் மட்டுமே 3 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. மற்ற பிரிவுகள் அனைத்திலும் விற் பனை குறைந்துள்ளது.
உள்நாட்டு விற்பனை மட்டு மல்லாமல் ஏற்றுமதியும் பாதிக்கப் பட்டுள்ளது. பயணிகள் வாகனம் மட்டுமல்லாமல் டிராக்டர் விற் பனையும் குறைந்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் கார் விற்பனையும் கடும் சரிவைச் சந் தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 51 சதவீதம் விற்பனை குறைந் துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள் ளது. டொயோட்டா நிறுவனத்தின் கார் விற்பனையும் ஆகஸ்ட் மாதத் தில் 21% அளவுக்கு குறைந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.