

மியூச்சுவல் பண்ட் நிறுவனங் களிலிருந்து ஜூன் மாதம் ரூ.25,000 கோடி முதலீடுகள் வெளியே சென்றுள்ளது. பல்வேறு மியூச்சுவல் பண்ட் முதலீட்டு திட்டங்களிலிருந்தும் முதலீட்டா ளர்கள் ரூ. 25,000 கோடியை வெளியே எடுத்துள்ளனர்.
இந்த வெளியேற்றத்தை தொடர்ந்து ஏப்ரல்- மே இரண்டு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது.
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலிருந்து வெளியே எடுத்த மொத்த முதலீடு ரூ.25,085 கோடியாக உள்ளது.
இந்த புள்ளி விவரங்களை மியூச்சுவல் பண்ட் நிறுவ னங்களில் அமைப்பான ஆம்பி வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கடந்த மாதத்தில் லிக்விட் மற்றும் நிதிச் சந்தை முதலீடுகளிலிருந்து முதலீடுகளை வெளியே எடுத்தாலும், பங்குச் சந்தை திட்டங்கள் ஏற்றத்தில்தான் இருந்தன என்று மியூச்சுவல் பண்ட் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பங்கு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் கடந்த மாதத்தில் ரூ.12,273 கோடி முதலீட்டை கண்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச முதலீடாகும் என்று டாயிஷ் வங்கியின் ஆசிய பங்குச் சந்தை ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
மியூச்சுவல் பண்ட் திட்டங் களில் ஜூன் மாதம் செய்யப்பட்டுள்ள மொத்த முதலீடு ரூ. 13,700 கோடியாக உள்ளது. ஜனவரி 2008க்கு பிறகு இரண்டாவதாக செய்யபட்ட அதிகபட்ச முதலீடு இது.
நடப்பு நிதியாண்டில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதல் காலாண்டில் உள்வந்த மொத்த முதலீடு ரூ. 85,727 கோடியாக உள்ளது.