

சஹாரா நிறுவனத்துக்கு புதிய நெருக்கடியை `செபி’ உருவாக்கி இருக்கிறது. சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் அனுமதியை செவ்வாய்க்கிழமை `செபி’ ரத்து செய்திருக்கிறது. சஹாரா நிறுவனம் தொழிலில் ஈடுவது பொருந்தவில்லை என்றும் இந்த நிறுவனம் கையாளும் சொத்துகளை இன்னொரு நிறுவனத்துக்கு மாற்றுமாறும் `செபி’ உத்தரவிட் டுள்ளது.
சமீபத்தில் சஹாராவின் போர்ட்போலியோ மேனேஜ் மெண்ட் சர்வீசஸ் (பிஎம்எஸ்) நிறுவனத்தின் அனுமதியை `செபி’ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனம் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கையாளுகிறது. இந்த நிறுவனத் தில் 24 பங்குச்சந்தை திட்டங்கள், 12 கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் 2 கலப்பின திட்டங்கள் உள்ளன.
சஹாரா மியூச்சுவல் பண்ட் புதி தாக யாரிடமுடம் நிதி திரட்டக் கூடாது என்றும் ஏற்கெனவே முத லீடு செய்த முதலீட்டாளர்களிடம் கூட நிதி திரட்டுவதற்கு உடனடியாக தடைவிதிப்பதாகவும் `செபி’-யின் 22 பக்க அறிக்கை தெரிவிக்கிறது.
சஹாரா மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு இந்த நடைமுறையையும் நிதி மாற் றப்படுவதையும் கண்காணித்து முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முதலீட்டாளர் நிதியை ஐந்து மாதத்துக்குள் மாற்றவில்லை என்றால், கட்டாயமாக யூனிட்களை விற்று முதலீட்டாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நிதியை மாற்றிய பிறகு 30 நாட்களுக்குள் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று `செபி’ கூறி இருக்கிறது.
சஹாரா குழுமம் முறைகேடாக முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியது. சுமார் 24,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட் டாளர்களுக்கு திருப்பி தரவேண்டி இருக்கிறது. இந்த நிதியை திருப்பி தராமல் இருப்பதால் இந்த குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.