

இந்தியா முழுவதும் செல்போன் எண்களை மாற்றாமல் பயன்படுத் தும் வசதி (எம்என்பி) நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்றாலும் அல்லது வேறு தொலைத் தொடர்பு வட்டாரங்களுக்கு மாறினாலும் தங்களது செல்போன் எண்ணை மாற்றத் தேவையில்லை. இதற்காக எவ்வித ரோமிங் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இதற்கு முன்பு மாநிலங்களுக்கிடையேயும், தொலைத் தொடர்பு வட்டாரங்களுக்கு இடையேயும் இத்தகைய வசதி இருந்தது. இது தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் இத்தகைய வசதி கொண்டு வரப்பட்டாலும், செல்போன் உபயோகிப்பாளர்களில் 2 சதவீதம் பேரே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வர் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செல்போன் சேவையளிக்கும் தனியார் நிறுவனங்களான பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், யுனிநார், எம்டிஎஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வீடியோகான் டெலிகாம் உள்ளிட்டவை இத்தகைய சேவை அளிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன.