வாராக் கடன் செலுத்தாத 400 நிறுவனங்களின் பட்டியல்: பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியீடு

வாராக் கடன் செலுத்தாத 400 நிறுவனங்களின் பட்டியல்: பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியீடு
Updated on
1 min read

அதிகரித்துவரும் வாராக் கடன் சுமையைக் குறைக்க பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தங்கள் வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்த தயங்கும் 400 நிறுவனங்கள் (தனிநபர்கள்) பட்டியலை ரிசர்வ் வங்கிக்கு அளித்துள்ளது.

இந்த பட்டியலை ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட வசதியாக இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்துவதற்கு உரிய நிதி ஆதாரம் இருந்தும் அதை செலுத்தாதவர்களைக் கண்டறியுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இதன் படி போதிய நிதி வளம் இருந்தும் கடனை செலுத்தாத 400 நிறுவனங் கள் பட்டியலை பிஎன்பி வெளி யிட்டது. அத்துடன் இந்நிறுவனங் கள் ஈடாக வைத்துள்ள சொத்து களை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

இந்த சொத்துகளின் மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடியாகும். இவற்றை சொத்து மீட்பு நிறுவனங்கள் (ஏஆர்சி) மூலம் நடப்பு நிதி ஆண்டுக்குள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தகவலை வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கௌரி சங்கர் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே நிதி நெருக் கடியில் தவிக்கும் நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள வழிகாட்டுதலின்படி மறு கடனுதவி அளிப்பது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கியதால் பிஎன்பி லாபம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பாதியாகக் குறைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in