புதிய நிறுவனங்களை பட்டியலிடும் விதிமுறைகளை எளிதாக்கியது செபி

புதிய நிறுவனங்களை பட்டியலிடும் விதிமுறைகளை எளிதாக்கியது செபி
Updated on
1 min read

புதிய நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) பட்டியலிடுவதற்கான (ஐபிஓ) விதிமுறைகளை செபி நேற்று முதல் எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை. இந்தியா விலேயே தங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்வதற்கு ஏற்ப விதிமுறைகளை எளிதாக்கி உள்ளது செபி.

இதனால் இ-காமர்ஸ் நிறுவ னங்கள் இந்தியாவில் பட்டியல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு கள் உருவாகி உள்ளது.

இந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை ரூ.10 லட்சமாகும். அதே போல நிறுவனத்தை பட்டியல் செய்த பிறகு நிறுவனர் பங்கு களை விற்பதற்கான கால அவகா சத்தை ஆறு மாதமாக செபி குறைத்திருக்கிறது.

தற்போது ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப் படுகிறது என்றால் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் தங்களது பங்குகளை விற்க முடியாது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் தொழில்முனைவு சிறப்பாக உள்ளது. சர்வதேச அளவுக்கு அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

தற்போது 3,100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. வருங் காலத்தில் நிறுவனங்கள் இணை வதற்கான சூழல் உருவாகும் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார்.

செபி- எப்எம்சி. இணைப்பு

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும், கமாடிட்டி ஒழுங்குமுறை ஆணை யமான எப்எம்சி-யும் வரும் செப்டம்பர் மாதத்தில் இணையும் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார். இதற் கான வேலைகள் நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதியில் முடிவடையும் என்றார்.

ஊக வர்த்தக நடவடிக்கைகளை குறைப்பதற்கான இரண்டு ஒழுங்குமுறை ஆணையங்களும் இணையும் என்று கடந்த பொது பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவித்தார்.

பட்டியலிடும் காலம் குறைப்பு

ஐபிஓ வெளியீடு முடிந்து பங்குகளை பட்டியல் செய்வதற் கான கால அவகாசத்தை செபி குறைத்திருக்கிறது.

தற்போது ஐபிஓ வெளியீட்டின் கடைசி நாளில் இருந்து 12 நாட்களுக்குள் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்படும். இந்த காலத்தை ஆறு நாட்களாக செபி குறைத்துள்ளது. இந்த புதிய விதி வரும் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வரும் என்று செபி தெரிவித்திருக் கிறது.

நிறுவனத்தின் நிறுவனர் களுக்கான (புரமோட்டர்) விதி முறைகளிலும் செபி மாற்றம் செய்திருக்கிறது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நிறுவனர், அந்த நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க முடியாது. அவர்கள் நிறுவ னத்தில் நேரடியாகவோ மறை முகமாகவோ நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாது.

மேலும் நிர்வாக இயக்குநராக மூன்று வருடங்களுக்கு மேல் அந்த நிறுவனத்தில் தொடர முடியாது என்று செபி தெரிவித்திருக் கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in