வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.75,000 கோடியாக உயர்வு

வங்கி பங்குகளில் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.75,000 கோடியாக உயர்வு
Updated on
1 min read

வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செய்யும் முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வட்டி குறைப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வங்கிப்பங்குகளில் முதலீடு செய்திருக்கும் தொகை 75,000 கோடி ரூபாயாக உயர்ந்தது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வங்கிப்பங்குகளில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்திருந்த தொகை ரூ.41,104 கோடி மட்டுமே.

ஏப்ரல் மாதத்தில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்த தொகை 74,810 கோடி ரூபாய். கடந்த மார்ச் மாதத்தில் ரூ.73,575 கோடி அளவுக்கு வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட்கள் முதலீடு செய்தன.

மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்த தொகையில் 20.42 சதவீதம் வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்திருக்கின்றன.

வங்கித்துறைக்கு அடுத்து ஐடி துறை பங்குகளில் அதிக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஐடி துறை பங்குகளில் ரூ.34,100 கோடியும், பார்மா பங்குகளில் ரூ.27,587 கோடி, ஆட்டோ துறை பங்குகளில் ரூ.24,544 கோடி, நிதித்துறை பங்குகளில் ரூ.22,425 கோடியும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in