

வெளிநாடுகளில் குறைந்த வட்டியில் பணம் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் அங்கு கடன் வாங்கி வந்தன. (இசிபி). ஆனால் இதற்கு பல வரம்பும் விதிமுறைகளும் இருந்ததால் இதனை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு, செபியின் முன்னாள் உறுப்பினரான சாகூ தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி நேற்று தன்னுடைய பரிந்துரையை செய்தது.
கடன் வாங்கும் தொகை, முதிர்வு காலம் உள்ளிட்ட பல விஷயங் களில் இருக்கும் தடையை நீக்கச் சொல்லி இந்த கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பரிந்துரை மீதான கருத்துகளை வரும் மே 10-ம் தேதி வரை நிதியமைச்சகத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட் டிருக்கிறது.
நிறுவனங்கள் வாங்கும் வெளிநாட்டு கடன் ஆண்டுக்கு 3,000 கோடி அளவுக்கு இந்தியாவுக்கு வருகிறது.
நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவதற்கு எந்தவிதமான எல்லையும் தேவை இல்லை. எந்த துறையை சேர்ந்த நிறுவனம் எந்த காரணத்துக்காகவும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கலாம். ஆனால் வாங்கிய கடன் அளவுக்கு ஏற்ப ஹெட்ஜ் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. அனைத்து துறை நிறுவனங்களும் சீராக ஒரே சதவீத தொகையினை ஹெட்ஜ் செய்திருக்க வேண்டும்.
வாங்கிய கடனில் எவ்வளவு சதவீத தொகையை ஹெட்ஜ் செய்ய வேண்டும் என்பதை நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, நிதி அமைச்சகமோ அல்லது ரிசர்வ் வங்கியோ முடிவு செய்து கொள்ளட் டும் என்று கமிட்டியின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விதிமுறைகளின் படி வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவதில் (இசிபி) பல விதி முறைகள் உள்ளன. தற்போது ஒரு நிறுவனம் ஒரு நிதி ஆண்டில் 75 கோடி டாலருக்கு மேல் வெளி நாட்டில் நிதி திரட்ட முடியாது. அதே போல குறிப்பிட்ட வட்டிக்கு மேலேயும் கடன் வாங்க முடியாது. குறுகிய காலத்துக்கு ஒரு வட்டி விகிதமும், நீண்ட காலத்துக்கு வாங்கும் பட்சத்தில் அதற்கு ஒரு வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.