காஸ் மானியத்தை ஒரு கோடி வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுப்பார்கள்: மத்திய அரசு எதிர்பார்ப்பு

காஸ் மானியத்தை ஒரு கோடி வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுப்பார்கள்: மத்திய அரசு எதிர்பார்ப்பு
Updated on
1 min read

ஒரு கோடி வாடிக்கையாளர்கள் காஸ் மானியத்தை வேண்டாம் என்று சொல்வார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

வசதி படைத்தவர்கள் காஸ் மானியத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனால் ஒரு கோடி பேர் காஸ் மானியத்தை கைவிடுவார்கள் என மத்திய அரசு எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 15.3 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

கடந்த வாரம் சர்வதேச எரிபொருள் மாநாட்டில் பேசிய மோடி 2.8 லட்சம் இந்தியர்கள் மானியம் வேண்டாம் என்று திருப்பி கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டுக்கு 100 கோடி ரூபாய் மீதமாகும்,இந்த தொகையை ஏழை மக்களின் வளர்ச்சி திட்டத்துக்கு பயன்படுத்திகொள்ள முடியும் என்று மோடி தெரிவித்தார்.

அமைச்சர்கள், நாடாளு மன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் காஸ் மானி யத்தை தவிரக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது குறிப்பிடத் தக்கது.

நேரடி மானியத்திட்டத்தின் படி பொதுமக்கள் மானியம் இல்லாமல் சந்தை விலையில் காஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய மானியம் அவர்களது வங்கி கணக்கில் வைக்கப்படும்.

2015-16-ம் நிதி ஆண்டு பட்ஜெட் எதிர்பார்ப்புகளின்படி பெட்ரோலிய மானியம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.60,270 கோடியாக இருக்கும் பெட்ரோலிய மானியம் இப்போது 30,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in