மே மாதம் தங்க பத்திரம் வெளியீடு

மே மாதம் தங்க பத்திரம் வெளியீடு
Updated on
1 min read

மக்கள் தங்கத்தின் மீது கொண் டிருக்கும் மதிப்பை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

இந்த தங்க பத்திரம் வருகிற மே மாதம் முதல் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தங்க கண்காணிப்பு கொள்கையும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

மத்திய நிதியமைச்சர் 2015-16 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிலையான வட்டியுடன் கூடிய தங்க பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

இதன் மூலம் உட்கட்டமைப் புக்கான நிதி திரட்ட திட்டமிடப் பட்டது. மேலும் தங்க கண்காணிப்பு கொள்கையின் முக்கிய அம்சமாக நாட்டின் பயன்படுத்தாத நகைகளை டெபாசிட் செய்யும் திட்டமும் அறிவித்தார்.

இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு ஏற்ப மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் ரிசர்வ் வங்கியுடன் பேசி வருகின்றனர்.

ஏற்கெனவே இருந்து வரும் தங்க டெபாசிட் திட்டங்களில் வட்டி கொடுக்க முடியவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது என்று இந்த திட்டம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோல தங்க பத்திரங்கள் குறைந்தபட்சம் காலம் மூன்று ஆண்டுகளாக இருக்கும். அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மக்களிடையே 20 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பில் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை புழக்கத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சி என ஜேட்லி பட்ஜெட் உரையில் குறிப் பிட்டார்.

இதன் மூலம் நடப்பிலுள்ள தங்க டெபாசிட் மற்றும் தங்க கடன் திட்டங்கள் சீரமைக்கப் படும். தங்க டெபாசிட் பெறுகிற போது உலோக மதிப்பின் அடிப்படையில் நிலையான வட்டி கணக்கிடப்படும்.

அதே போல உலோக மதிப்பு அடிப்படையிலேயே வட்டி கணக்கிடப்பட்டு வங்கி மற்றும் முகவர்களுக்கும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in