

மார்ச் 31-ம் தேதிக்குள் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் குறைந்தபட் சம் ஒரு பெண் இயக்குநராவது இருக்க வேண்டும். ஒரு வேளை பெண் இயக்குநர்கள் நியமிக்கப் படாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று செபி தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது ஒரு அவமான கரமான நிகழ்வு என்றார். இந்தி யாவில் சுமார் 8,000 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் குறைந்த பட்சம் ஒரு தகுதி வாய்ந்த பெண் களை கூட இந்த நிறுவனங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முந்தைய காலக்கெடுவாக இருந்தது. அதன் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த காலக்கெடுவுக்குள் பெண் இயக்குநர்களை நியமிக்கவில்லை என்றால் அபராதம் நிச்சயம் இருக்கும் என்றார்.
இதற்கு முன்உதாரணமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு 75 சதவீதத் துக்கு மேல் இருக்க கூடாது என்றும், பொதுமக்களுக்கு 25 சதவீதம் இருக்க வேண்டும் என்ற உத்தரவை மீறிய நிறுவனங் களுக்கு செபி அபராதம் விதித்தது என்பதை சின்ஹா குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (ஆர்.இ.ஐ.டி) விதிமுறைகள் வெளியானாலும், சந்தையில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதற்காக கவலைப்பட தேவையில்லை. அமெரிக்காவில் இதுபோன்ற திட்டம் வந்த பிறகு ஆரம்ப கட்டத்தில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பிறகு தான் வளர்ச்சி இருந்தது.
ஸ்டார்ட் அப் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்து மார்ச் 27-ம் தேதி விவாதிக்க இருக்கிறோம் என்றார். இன்னும் சில மாதங்களில் இது குறித்து ஆய்வறிக்கை வெளியிட இருக்கிறோம் என்றார்.
செபி, எப்.எப்.சி ஆகிய ஒழுங்குமுறை ஆணையங்கள் இணைப்பு குறித்து பேசிய சின்ஹா இதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நிதி அமைச்சகத்துடன் இணைந்து இணைப்புகான வேலை கள் செய்து வருகிறோம் என்றார். மேலும் இந்த இணைப்பில் சிறுசிறு மாற்றங்கள் செய்ய வேண்டுமே தவிர பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றார்.
கமிஷன் தொகைக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
பரஸ்பர நிதித் திட்டங்களுக்காக விநியோகஸ்தர்களுக்கு அதிக அளவில் கமிஷன் தரப்படுகிறது. இதற்கு அதிகபட்ச வரம்புத் தொகையை நிர்ணயிப்பது மிகவும் சரியானதாக இருக்கும் என்று சின்ஹா கூறினார்.
இந்திய பரஸ்பர நிதி திட்ட அமைப்பு (ஆம்ஃபி) ஒரு சதவீதம் கமிஷன் தொகை நிர்ணயிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இருப்பினும் கமிஷன் தொகைக்கு அளவு நிர்ணயிப்பதை செபி விரும்பவில்லை என்றும் அதை இத்துறையினரே நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். அதிக அளவில் கமிஷன் தொகை அளிக்கப்படுவதால் இது குறித்து புகார்களும் வந்துள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சில வங்கிகளுக்கு கிடைக்கும் தரகு கமிஷனில் 50 சதவீதம் ஒரே ஒரு நிறுவன பரஸ்பர நிதித் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதிலிருந்தே அந்த குறிப்பிட்ட நிதித் திட்டத்தை விற்பனை செய்வதில் அவை அதிக கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் சந்தை வல்லுநர் களோ சில பரஸ்பர நிதி நிறுவனங் கள் அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக விநியோகஸ்தர் களுக்கு அதிக கட்டணம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
அதிக கமிஷன் தரப்படுகிறது என்பதை ஆம்பி அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையால் சிறிய நிதி நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படுவதாக செபி கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 45 நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் பரஸ்பர நிதி நிர்வாகத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியாகும்.