

ரோமிங் கட்டணம் மற்றும் குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) கட்டணங்களைக் குறைக்குமாறு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணயம் (டிராய்) பரிந்துரைத்துள்ளது.
இதன்படி ரோமிங் கட்டணம் 35 சதவீதமும், எஸ்எம்எஸ் கட்டணம் 80 சதவீதம் வரையிலும் குறைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறியை டிராய் நேற்று வெளியிட்டது.
தேசிய அளவிலான ரோமிங் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் இத்தகைய பரிந் துரையை டிராய் அளித்துள்ளது. இப்போது வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ் அடிப்படையில் தொலைத் தொடர்பு வட்டாரங் களின் எண்ணிக்கை 22 ஆகும். இதன்படி ரோமிங்கின்போது ஒரு நிமிஷத்துக்கு அதிகபட்சம் 65 காசு வசூலிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்போது இது ஒரு ரூபாயாக உள்ளது.
இதேபோல எஸ்டிடி கட்ட ணத்தை ஒரு நிமிஷத்துக்கு ரூ. 1.50-லிருந்து ரூ. 1 ஆகக் குறைக்கலாம் என கூறப்பட் டுள்ளது. இதேபோல வரும் அழைப்புகளுக்கு (இன்கமிங்) ஒரு நிமிஷத்துக்கு 75 காசுகளாக உள்ளதை 45 பைசாவாகக் குறைக் கவும் பரிந்துரைத்துள்ளது.
தற்போது குறுஞ்செய்தி களுக்கு ரோமிங்கில் ஒரு செய்திக்கு ரூ. 1 வசூலிக்கப் படுகிறது. இதை 20 காசுகளாக குறைக்கலாம் எனவரும் டிராய் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மார்ச் 13-ம் தேதிக்குள் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண் டும். இதையடுத்து டிராய் தனது இறுதி முடிவை அளிக்கும்.